பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 63 என்ற திருப்பாடலால் அறிந்து தெளியலாம். இதனை மெய் கண்டாருக்கு முன்பிருந்த திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் என்பவர் தனது திருக்களிற்றுப் படியார் என்ற நூலில், & ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண்" என்று கூறியிருத்தலையும் கண்டு தெளியலாம். மெய்கண்டாரின் விளக்கம்: இவற்றால் சைவசமயம் 'இறைவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதல் தெள்ளி தின் விளங்கும். முதல்வனாகிய ஒரு பொருளிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தலை- அத்துவிதமாய் இருத்தலை-மெய்கண்டார் அருமையாகத் தெளிவாக்குவார்." அரக்கை உருக்கி அதனோடு கற்பொடி சேர்த்துச் சாணை செய்யப்படுதலை நாம் அறிவோம். இச்சாணையில் கல் அரக்கொடு உடன் விரவிக்கிடக்கின்றது. இவ்விரண்டும் தன்தன் தன்மையில் குறைவுபடவில்லை. சேர்த்துப் பிடிக்கும் தன்மையாகிய அரக்கின் தன்மையும் கத்தியினைக் கூர்மை படுத்தும் தன்மையாகிய கல்லின் தன்மையுமாகிய இரண்டு தன்மைகளும் சாணையில் காணப்படுகின்றன. இச்சாணையில் கல் தன் சுயவடிவத்துடன் காணப்படாது அரக்கொடு அரக் காய்க் காணப்படுகின்றது. எனவே, சாணை என்னும் ஒரு பொருளில் மூவேறு தன்மைகள் ஒருங்கு கூடியிருக்கக் காண்கின்றோம். அது போலவே,முதல்வன்பாலும் இறத்தல் 41. களிறு - 86 42. சி.ஞா.போ. சூத்.2 அதிகரணம் -1