பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 மாணிக்கவாசகர்


 பணித்த வண்ணம் அடிகளை வளைத்துப் பிடிக்கின்றனர். எனினும் அடிகளது சிவபக்திச் சிறப்பினை யுணர்ந்து அவரைத் துன்புறுத்த அஞ்சுகின்றனர். வாதவூரரைச் சிறைப்படுத்தி ஒறுக்கும்படி மேலும் சிலரை அனுப்புகின்றான். அவர்கள் அடிகளைக் கொடுஞ்சிறையில் தள்ளித் துன்புறுத்து கின்றனர்; பல்வேறு தண்டனைகளைத் தருகின்றனர்.2 துயரம் பொறாத அடிகள் இறைவனைநோக்கி முறையிட்டுப் புலம்புகின்றார். இப்பொழுதுதான் குழைத்த பத்து, அருட் பத்து என்ற பனுவல்கள் பிறக்கின்றன.

அடியார் வருத்தம் தரியாதவர் சிவபெருமான். தம்பால் அன்புடைய வாதவூரடிகளின் மனத்துயரைத் தீர்க்கத் திருவுளம்கொள்ளுகின்றார். மிழலை நாட்டுக் காட்டில் திரியும் நரிகளையெல்லாம் ஒருங்கு திரட்டி அவற்றுக்கு வேண்டிய அறிவுரைகளைச் சொல்லி அவற்றையெல்லாம் பகிகளாக்குகின்றார். தம்மைப் பிரியாதுள்ள கனநாதர்களைக் குதிரை வீரர்களாகப் பணித்துத் 3 தாமும் ஒரு குதிரை மீதமர்ந்து குதிரைத்திரளுடன் மதுரை வந்தருள்கின்றார். அங்ஙனம் வருபவர் வழியிடையே திருவாதவூரை அடைந்து வாதவூரடிகளின் செவியிற்படும்படி தம்முடைய திருவடிச் சிலம்பொலியைக் காட்டியருளுகின்றார்." 4

  வாத ஆரினில் வந்தினி தருளிப் 
  பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
                         - கீர்த்தித்திரு. (52.53)



2. நரிபரியாக்கிய-7, 8, 9 3. தேவர்கள் குதிரை வீரர்களாக வந்தனர் என்று கூறும் திருவாதவூரர் புராணம். வாதவூரடிகள் துன்பத்தை அநுபவித்த சிறைக் கூடம் திருவாதவூரருகே இருந்தது போலும் 4. வாதவூரடிகள்துன்பத்தை அனுபவித்த சிறைக்கூடம் திருவாதவூரருகே இருந்தது போலும்.