உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

25

'இந்த மனுஷன் அவசரப்பட்டுக் குப்பைத் தொட்டியை இடித்துத் தள்ளிவிட்டார். கார்ப்பரேஷன் இவர் மீது வழக்குப்போட்டு இருக்கிறார்கள். இவருக்காக நான் வாதாடுகிறேன்' என்றார்.

கரசேவை செய்திருக்கிறார்' என்றேன்.

வக்கீல் இங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு எதிர் வீட்டுப் பெரியவர் என் வீட்டிற்கு வந்தார்.

'மன்னிக்கவும்' என்ற முன்னுரையோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

இதுவரை அவர் என்னிடம் பேசியது இல்லை. அவரை மன்னித்து விட்டேன்.

இது ஆரம்பம்.

அவர் ஒரு ரம்பம்' என்பதைப் போகக் போக உணர்ந்தேன்.

"நான் கிறிஸ்துவன்; எனக்கு எதுவும் சுத்தமாக இருக்க வேண்டும். என் வீட்டு முன்பு மற்றவர்கள் வந்து குப்பையைக் கொட்டுகிறார்கள். குப்பைத் தொட்டி இருந்தால்தானே அங்கே வந்து அவர்கள் கொட்டுவார் கள். அதனால் அதை இடித்துவிட்டேன். இது ஒரு தவறா? நான் என்ன கோயிலையா இடித்து விட்டேன். குப்பைத் தொட்டிதானே' என்றார்.

"அதே இடத்தில் மறுபடியும் கட்டித்தர வேண்டும் என்கிறார்கள். வேறு வழி இல்லை; இது தெரிந்திருந்தால்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/27&oldid=1112802" இலிருந்து மீள்விக்கப்பட்டது