பக்கம்:குப்பைமேடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ராசீ

அதை இடித்து இருக்க மாட்டேன்; ஆவேசப்பட்டு விட்டேன்' என்றார்.

-6

'நீ எங்கே தங்குகிறாய்?' என்று கேட்டான்.

கோணிப்பை குப்புசாமியைப் பார்த்து யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றான்.

இந்த அழகிய தொடர் அவனுக்கு எப்படித் தெரிந்தது. வியந்தேன்.

இது எங்குக் கற்றாய்?' என்றேன்.

"தமிழ் மாநாடு நடத்தினார்கள். அங்கு எழுதி இருந் தார்கள்' என்றான்.

" உனக்கு என்று ஒரு வீடு கிடையாதா"

"திரை அரங்குதான் நான் உறங்கும் இடம். இரவு சினிமாப் பார்ப்பேன். காலையில் அங்குக் கிழித்து எறியப் படும் டிக்கட்டுகள் பொறுக்குவேன்' என்றான்.

'குடிப்பழக்கம் உண்டா?'

'இல்லை' என்றான்.

‘'வேறு கெட்ட பழக்கம்?"

'காதல் பழக்கம் உண்டு' என்று துணிந்து கூறினான்.

அந்தச் சொல் அவனிடம் கொச்சைப்படுகிறது என்பதை உணர முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/28&oldid=1112803" இலிருந்து மீள்விக்கப்பட்டது