பக்கம்:குப்பைமேடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

27

அதை நான் கண்டிக்கவில்லை.

"எங்கே என்னை ஒதுக்கிவிடுவீரோ என்று பார்த்தேன்'.

'ஒதுக்குவதற்கு என்ன இருக்கிறது. வயசு, ஒரு தினுசா இருப்பது சகஜம்தானே' என்றேன்.

'இப்போது நாங்கள் எங்களைக் காத்துக் கொள் கிறோம்' என்றான்.

விளங்கவில்லை'

'இப்பொழுது எய்ட்ஸ் என்ற நோய் பரவுகிறது என்று கூறுகிறார்களே! அதற்குத் தற்காப்புச் செய்து கொள்கிறோம்' என்றான்.

" எப்படி?’’

'உறைகள்' என்றான்.

விளம்பரத்தின் விளைவு பயன்தந்து வருகிறது என்று அறிய முடிந்தது.

திடீர் என்று அவன் ஒரு கேள்வி கேட்டுவிட்டான்.

சமுசாரத்தை ஊருக்கு அனுப்பி விட்டீர்களா பார்ப்பதே இல்லையே' என்று கேட்டுவிட்டான்.

அவள் என்னிடம் சண்டைபோட்டுக் கொண்டு போயிருக்கிறாள் என்பதை அவனிடம் சொல்ல முடியுமா? அவனுக்கும் எனக்கும் இங்கேதான் வித்தியாசம். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/29&oldid=1112804" இலிருந்து மீள்விக்கப்பட்டது