உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


தேர்வு எண் வரச்செய்தித்தாளைப் புரட்டும் மாணவனாக அவள் இருந்தாள்.

தன்னைக் கண்டு காதலித்த இளைஞனே தன்னை மணக்க வருவான் என்பது அவள் எதிர்பார்ப்பு; தவிப்பும் கூட. வில்லை எடுத்தான்; எடுத்து முறித்தான் ; எல்லாம் விரைவில் நடந்து முடிந்தன ; முறிவு ஒலி அங்கு முழவு எனக் கேட்டது ; கரம் கொட்டி அனைவரும்கோஷம் செய்தனர்; ஆரவாரத்தில் அவர்கள் முழுகித் திளைத்தனர்.

செய்திக்காகக் காத்திருந்த சீதைக்கு நீலமாலை என்பாள் தோழி ஒடோடிச் சென்று செய்தி செப்பினாள் ; கண்டவனே கொண்டவன் எனக் கூறினாள்.

வில்லை முறித்து அவளை மணத்தில் கொள்ள இருப்பவன் என்று அவள் விளக்கம் தந்தாள் ; சீதை உவகையுள்ஆழ்ந்தாள்;மகிழ்ந்தாள்

மண நிகிழ்ச்சி

திருமண ஏற்பு அதன் முடிப்பு ; அதற்காக அழைப்பு, அறிவிப்பு தசரதனுக்கு அனுப்பப்பட்டு அவன் அனுமதி பெற்று நிகழ்ச்சி நிரல் அமைத்துத் தொடர்ந்தனர்.

தசரதன் தன் அமைச்சர், நண்பர் உறவினர்,மனைவியர்,மற்றும் உள்ள தலைவர்கள், ஊர்ப் பெரியோர்கள்அவர்களைஅழைத்து வந்தான்;மிதிலையில்அனைவரும் வந்து கூடி நிறைந்தனர்.