பக்கம்:குப்பைமேடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

43

'தங்கள் படைப்பு?'

கவிதை" என்றாள். இது உங்கள் இதயத்துடிப்பு' என்றேன். பெண்களுக்கு இது விழிப்பு' என்றாள்.

அவள்மீது இச்சை தோன்றியது, அதற்குக் காரணம் என் பச்சை இளமைதான்.

அவளைப் பற்றிச் கேள்விப்பட்டிருந்தேன்.

'மணமானவள், தான் அதில் குணம் காணாததால் விடுதலை பெற்றவள்' எனறு கேள்விப்பட்டிருந்தேன்.

எழில் மிக்க இவளை எப்படி முன்னவன் விழைவு நீங்கி விலகினான் என்பது புலப்படவில்லை.

"நிச்சயம் அவன் அவளை விலக்க முன் வந்திருக்க மாட்டான். இவளேதான் கூண்டைவிட்டுப் பறந்து வெளியேறி இருக்க வேண்டும்' என்று முடிவு செய்து கொண்டேன்.

அந்தப் பொருளை அறிய எந்தச் சொல்லைப் பயன் படுத்துவது? எழுத்தில் தொடங்கினேன். திருக்குறளைப் போல: நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்' என்று கேட் டேன், 'தட்டி எழுப்பத்தான்' என்றாள்.

எழுச்சி மிக்க சொற்களாக அவை எனக்குப்பட்டன.

'சந்திப்பிழைகள் நிறைய செய்வேன்' என்றாள். அது அனைவருக்கும் பொது' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/45&oldid=1113134" இலிருந்து மீள்விக்கப்பட்டது