உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


அந்த சிவதனுசுவை முறிப்பவனுக்கே உரியள் சீதை என்று விதி வகுத்தான் ; அது இப்பொழுது அவனுக்கே சதியாகியது.

அவன் தயக்கத்தை அறிந்த இராமன் வில்லை முறிக்க முன்னுக்கு வந்தான். விதியை மீறித் தனிப்பட்டவர்கள் எதுவும் செய்ய முடியும் அது அவர்கள் உரிமை ; அரசர்கள் விதிக்குக் கட்டுப்பட்டவர்கள் ; அதனால் அதைப் பலருக்கும் அறிவித்திருந்தான்.

வில்லுக்கு ஒரு புதுவாழ்வு பிறந்தது ; எடுத்து முறிக்க ஒர் இளைஞன் வந்திருக்கிறான் என்று உவகை அடைந்தான்.

இது எடுத்து முறிப்பவனுக்கு உரியள் இவள் என்று அறிவித்தான் ; அழைப்பு இராமனுக்குத் தரப்பட்டது ; விழைந்து அவனும் எடுக்கச் சென்றான்.

அதற்கு என ஒரு விழா அமைத்தான்; அரசர்கள் பலர் அங்கு வந்து கூடி அமர்ந்தனர். நாட்டு மக்களில் பெருநிலக்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.

இராமனைக் கண்டு அவர்கள் வியந்தனர் ; "இந்தச் சீதை மிகவும் கொடுத்து வைத்தவள் ; அழகும் ஆண்மையும் மிக்க இளைஞன் அவனை அவள் அடைவது உயர்பேறு"என்றனர்.

சீதை தன் தனியறையில் அந்தப் புரத்தில் தோழியரோடு காத்து இருந்தாள் ;