உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


சாதனை படைத்தவன் என்பதை சனகன் அறிந்தவன்.

இராமனைக் கண்ட சனகன் கதை எழுதிப் பரிசு பெறும் எழுத்தாளன் ஆனான் ; தான் பெற்றமகளுக்கு வாழ்வு கிடைக்கிறது : மகிழ்வு உற்றான்.

உடனே பேசி மணம் நடத்த விழைந்தான். ஆனால் இயலவில்லை; காரணம்; அவனே தனக்கு ஒரு தளையை அமைத்துக் கொண்டான்.

விருப்பாக இருந்தால் மாற்றி எழுதலாம் ; இது முடிவு ; மாற்றி எழுத முடியாது;இப்படித்தான் இவளை அடைய வேண்டும் என்று ஒரு தளையைத் தானே அமைத்துக் கொண்டான் ; அது தடையாகியது.

சானகி பேரழகி ; அதனால் அவளை மணக்க அரசர்கள் போட்டி இட்டனர் ; அதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு.

காலம் காலமாக ஒரு வில் அவனிடம் எடுப்பார் அற்றுக் கிடந்தது ; அதன் பழைமை யாருக்கும் தெரியாது ;

அதனால்அதுசிவன்கையில்இருந்த வில் ; அது இவர்கள் கைக்கு வந்தது என்று ஒரு கதை கட்டி வைத்தனர்.