உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


வீர விளையாட்டுக்காக அல்ல காதலுக்காக அவன் சாதித்த சாதனை.

சித்திரத்தைச் சிந்தையில் தீட்டி அத்திரத்தோடு சனகன் அவைக்குச் சென்றான்; அடக்கமாக அமர்ந்தான் ; அருகில் தம்பியும் இருந்தான்.

வேள்வி என்று சொல்லி வேத வியாசர்களை சனகன் வரவழைத்து இருந்தான்.

"யார் இவர்கள் ? பேர் யாது ?" "பெரும்புகழ் படைக்கும் ஆற்றல் மிக்க இளைஞர்கள்" என்று கேட்டுத் தெரிந்தான்.

தாடகையை வென்று அவன் சரித்திரம் படைத்தான் ; அகலிகையை எழுப்பி அறிவன் அவன் என்பதைக் காட்டி வைத்தான் ; தசரதன் மூத்த மகன் இராமன். இந்த வரலாற்றுச் செய்தியை விசுவன் வாய்மொழி வழி கேட்டு அறிந்தான்.

விசுவாமித்திரன் நாடு அறிந்தவன் அவன் ராஜரிஷி; மன்னனாக இருந்து அதனால் மதிப்பில்லை என்பதால் ஆண்டியானவன் ; வைராக்கியம் கொண்டவன் ;