உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


அவளைத் தொட்டு இழுத்து விட்டான் ; அவள் கெட்டு விட்டாள் என்று கதை கட்டி விட்டனர்.

கட்டிய கணவன் கவுதமன் ; அவன் கோயில் பூசாரி ; செப தபங்கள் தவறாமல் செய்பவன் ; அவளை அவன் தன் வீட்டில் சேர்க்கவில்லை ; அவள் ஒரம் கட்டப்பட்டு விட்டாள்.

உணர்வு எல்லாம் பாழாகி ஊர் சுற்றி வந்த இந்தப் பெண்ணை யாரும் மதிக்கவே இல்லை ; அவள் பெண் என்பதையே மறந்தனர் ; 'கல்’என்று அவளைக் கருதினர்; சிலைபோல இருந்த அந்தக் கலையைச் காகுத்தன் கண்டான் ; கடையில் ரொட்டி வாங்கிக் கொடுத்தான் ; அவள் பசி தீர்ந்து மகிழ்ந்தாள்.

அவள் முகவரி கேட்க அவள் தகவல் ஏதும் கூறாமல் இருக்க விசாரித்துத் தெரிந்து அந்தத் தவசியை அழைத்தான்.

கவுதமன்இராமனைஅணுகினான்; "வீட்டில் யார் சமைப்பது ?” என்று கேட்டு வைத்தான் ; "தானே எல்லாம்" என்று