உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


அவர்களை அடித்துத் துரத்தி முனிவர்களுக்கு உதவி நின்றனர்; விசுவன் வேள்வியை முடித்துக் கொண்டான்.

கல் உயிர் பெற்றது

"அடுத்த பயணம் எங்கே" ? என்பது அவர்கள் தொடுத்த வினா. "மிதிலையில் வேள்வி ஒன்று சனகன் நடத்துகிறான் ; அங்கு நம் பயணம்" என்றார் முனிவர். புதிய நகரைப் பார்க்க அவர்களுக்கு விழைவு ஏற்பட்டது; நகர் நோக்கி நடந்தனர் வழியில் ஒரு சிறு நிகழ்ச்சி.

அங்கே ஒரு பெண் சந்தியில் நின்று இருந்தாள் ; பிறர் கையேந்தி நின்றாள். கிழிச்சல் புடவை; அலைச்சல் மயிர்முடி; மேற்குடி வாசி ; பெயர் அகலிகை என்றனர்.

சித்தப் பிரமை பிடித்தவள் என்று சுத்தப்பிராமணர் கூறினர்; பெரிய வீட்டுப் பெண் அவள் ; அவள் கதை நெஞ்சை உருக்கியது.

வாலிபப் பையன் ஒருவன் செல்வச் சிறப்பால் சீர் அழிந்தவன் ;