உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

            24

அறிவு இயக்க இளைஞர் வேள்வி செய்வதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர்; அவசரப் பட்டனர்; சில சமயம் அதிர் வேட்டுகள் வைத்துக் கலைத்தனர். சாத்திரம் கற்ற சந்நியாசிகள் அவர்கள் என்ன செய்வார்கள் ? சுருதிகளைக் கற்றார்கள் அவை வேளவிகளை வலியுறுத்தி எழுதின.

சங்கரர் சாற்றிய ஞான உரை அதை அவர்கள் கற்க மறுத்தனர். சடங்குகள் அவர்களுக்கு வழித்தடங்கள் ஆயின.

சுதந்திரத் திரு நாட்டில் யார் வேண்டுமானாலும் சட்டைகளைக் கிழித்துக் கொள்ளலாம் ; அது அவர்கள் சுய விருப்பம்.

இந்த இளைஞர்கள் அறிவுப் பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு வேள்விகளை அழிக்க முயன்றது தவறு; அதற்காக அவர்கள் கற்களை வீசினார்கள்; இந்த முனிவர்கள் இராமனிடம் முறையிட்டனர்.

இராமன் இலக்குவன் இருவரும் வில் ஏந்திய வீரர்கள் அவர்களிடம் அந்த இளைஞர்களை இந்த முனிவர்கள் கொடியவர்கள் என்றனர்.