பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


தனிப் புலவர் சிலர் [சோழர் காலம்]

ஒட்டக்கூத்தர்

இவர் கவிச்சக்கரவர்த்தி எனப் பாரரட்டப்படுகிறார். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகியோர்மீது உலாக்கள் பாடியுள்ளார். இவற்றின் தொகுப்பு மூவருலா என வழங்குகிறது. தக்கயாகப் பரணி, குலோத்துங்க சோழன் உலா முதலியனவும் இவர் இயற்றியனவே. இராமாயண உத்தர காண்டத்தை இவர் பாடியதாய்க் கூறுவர். இவர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

புகழேந்திப் புலவர்

"வெண்பாவிற் புகழேந்தி" எனும் தொடர் இவரது செய்யுளியற்றும் திறத்தை வெளிப்படுததும். இவர் பாடிய நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் எனும் மூன்று பகுதிகளை உடையது இவர் காலம், கி பி. 13ஆம் நூற்றாண்டு.


நாயக்கர் காலம்

வில்லிபுத்தூரார்

இவர் வடமொழி வியாச பாரதத்தைத் தமிழில் சுருக்கமாகப் பாடினார் அது வில்லிபுத்தூரார் பாரதம் என வழங்குகிறது. இது 433 விருத்தப்பாக்களால் ஆனது. இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். வக்கைபாகை வரபதி ஆட்கொண்டானின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு.

காளமேகப் புலவர்

கும்பகோணம் அருகிலுள்ள நந்திபுரத்தில் இவர் பிறந்தார். ஆசுகவி பாடுவதில் இவர் வல்லவர்; வசை