அதிர்ச்சி
185
அவர் இறங்கி வருவதைக் காண முடிந்தது; நானும் இறங்கி வந்தால்தான் சந்திக்க முடியும் என்பதை உணர்ந் தேன்.
-3
அதற்குள் டெலிபோன் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார். நீங்கள் டெலிபோன் கேட்டி ருந்தீர்களா?. கனெக்ஷன் வந்துட்டுது; விரைவில் வந்து விடும்’ என்றார்.
'நன்றி' என்றேன். ஆனால் கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். எப்படியும் இந்த மாதத்திற்குள் கொடுத்து விடுவோம். கொஞ்சம் அவசரமாக வேண்டு மானால் எங்களை வந்து பாருங்கள்' என்று சொல்லி விட்டுப் போனார்.
நன்றி' என்று சொல்லி அனுப்பினேன். ஆபீசர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். வீடு தேடி வந்து நல்ல சமாச்சாரம் சொல்லி எனக்கு அழைப்பிதழும் தந்து ஆதரவும் காட்டுகிறாரே? இவரல்லவா ஆபீசர்' என்று அவரைப் பாராட்டிப் பேசினேன். கார்பரேஷன் அதிகாரி சிரித்தார்.
ஏன் சார்? சிரிக்கிறீங்க?"
சோழியன் குடுமி சும்மா ஆடாது? சார். வந்தவர் மாமனா? மச்சானா? அவங்ககூட இரண்டு வேளை இருந்து சாப்பிடத்தான் வருவாங்க. நோக்கமில்லாமல் யாரும் உதவி செய்ய மாட்டார்கள்' என்றார்.
13