பக்கம்:குப்பைமேடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

ராசீ

'இல்லை, குடிக்கூலி அதிகம் கேட்கிறார்கள்'

வீட்டுக்காரனைக் கேட்டால் அவன் விலைவாசி உயர்ந்து போச்சு என்பான். வரி ஏறிப்போச்சு என்பான். வரி ஏறிப்போச்சு; வரி கட்றதா? வட் டி கட்றதா என்று தான் கேட்பான். அவனவன் லோன்லே கடன்வாங்கி வீட்டக்கட்டிப் போட்டுட்டு வட்டி கட்ட முடியாம திணறான். நீங்க வேறு அவன் மேல வந்து உக்காlங்க. நீங்க போட்ற வரியை வைச்சு வருமானவரி வேறு அவருக்கு என்ன சார் கிட்டும்? கால் வட்டி கூடக் கிட்டாதே? அப் புறம் எவன் வீடு கட்டுவான்.

'கட்டாமலா இருக்காங்க

இரண்டு அடுக்குன்னு பிளான் வாங்குகிறார். நான்கு அடுக்கு கட்டுவாங்க'.

கட்டவிடுங்க, அவர்களை வாழ விடுங்க. எல்லாரும் பென்சனை நம்பி வாழ முடியறதில்லை. விதவைகள், முதி யோர்கள் எல்லாம் போய் ஒரு வீடு இருக்கும். அதுதான் வரும்படி, நீங்க வந்து தொல்லை கொடுக்கறிங்க. திடீர் என்று ஏத்தி விடுறீங்க? அவங்க என்ன செய்வாங்க? ரிப்பன் கட்டிடத்தைத் திருப்பதி மலைபோலச் சுற்றி வர வேண்டியதுதான்'.

'எங்களைச் சரிகட்டி விட்டால் சரியாப் போகிறது? அதுக்குத்தானே நாங்க இருக்கிறோம். நாங்கள் மக்க ளுக்குச் சேவை செய்யக்காத்திருக்கிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவைப்படுகிறது.

சட்டம் ஒழுங்கா, நியாயமா இருந்தால் நாங்கள் எப்படிப் பிழைக்க முடியும். நீங்க சொல்றதைச் சொல் லுங்க, நாங்க முடிஞ்சதைச் செய்யறோம்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/186&oldid=1116099" இலிருந்து மீள்விக்கப்பட்டது