6
உள்ளத்துணர்வைக் கொள்ளை கொண்டு ஆழ்த்தும் கள்ளும் காமமும் விளைக்குங் ‘களி’யை எள்ளி விலக்குவர் தெள்ளறிவுடையோர்.
புறத்துணையால் எழும் அகத்தின் மகிழ்ச்சி பழி படாவிடத்தும், நிலையா நீர்மையால் அறனறி வார்பால் தலைவிடம் பெறாது. பொறிக் குணவாகும் புறப்பொருளியல் பின் மாற்றமும் மறைவும், புலன்தரும் உவகையைப் போக்கவும் குறைக்கவும் போதியதாகும். பொருள் நிலை மாறாவிடத்தும், அது தரும் மகிழ்ச்சி மனநிலைமாற அதனொடு மாறித் தந்நிலை குன்றவும் பொன்றவும் கூடும். புறத்துணையாலே இன்பம் எய்த எண்ணியோன் ஒருவன், காவும் கடலும், யாறுமலையும் யாவும் துருவி நாடெலா மலைந்தும் தேடிய இன்பம் கூடப்பெறாமல் மீண்டு தன்னகத்தே விளைபொருள் அதுவெனத் தெளிந்த உண்மையை, ஆங்கில மொழியில் பொற்கொல்லப் பெயர்ப் புலவன்பாட்டுத் தெள்ளமுதம் போல் தெவிட்டாதுணர்த்தும்.
இனி, நிலையா உணர்வின் நீர்மையால் அமையும் உவகை; உலையா அறிவினில் நிலையிறும் இன்பம், அறிவையும் உணர்வையும் அயர்த்தி மயக்கும் களி அவை இரண்டொடும் ஒவ்வாதா கையால், அதை எல்லாரும் எள்ளி வெறுத்து இகழ்வர். “களியை மெய்யறியாமை” எனவும் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாது” எனவும்