பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acomia

56

acquired immunity


acomia : வழுக்கை.

aconite : அக்கோனிட் : அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம்.

acology : மருந்து மருத்துவ இயல் : மருந்து தொடர்பான மருத்துவத்துறைத் தனிஇயல்.

aconuresis : சிறுநீர் கட்டுப்பாடிலா.

acoprous : மலமிலாக் குடல்.

acor : கசப்புச் சுவை.

acorea : கண்மணியின்மை; கண் மணியில்லாத கண் : கண்ணில் பாப்பா இல்லாத நிலை; கண்ணில் நிறமிழி குழைமம் அற்ற நிலை.

acoria : இரைப்பை நிறை உணர்விழப்பு.

acousia : இணைப்புச் சொல் : 'கேட்டல்' நிலையைக் குறிக்கின்ற ஓர் இணைப்புச் சொல்.

acoruscalamus : வசம்பு.

acousma : கற்பனை ஒலிகேட்பு.

acousticmeatus : செவிகுழல்.

acousticophobia : ஒலியச்சம்.

acoustic : ஒலியியல்; ஒலிசார் : ஒலி தொடர்புடைய கேட்டல் உணர்வுள்ள செவிக்குழல் துளை, செவி நரம்பு.

acquire : கொள்;ஈட்டு.

acoustogram : மூட்டு இயக்க ஒலி வரைவு.

acquired : அடையப் பெற்ற; பெறப்பெற்ற.

acquired immune deficiency syndrome (AIDS) : ஈட்டிய நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்; ஏமக்குறை நோய்;(எய்ட்ஸ்) : இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமியினால் (Human Immume Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு கட்டங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது: (1) நோய் எதிர்ப்புப் பொருள். இது கிருமியைக் கொண்டு செல்லும் பொருள். இந்நிலையில் இந்நோய் பீடிக்க 10% வாய்ப்புகள் உண்டு. (2) தொடர்ந்து நீடிக்கும் பொது நிணநீர் கொண்டு செல்லும் பொருள். இந்த நிலையில், புற நோயாளிகளுக்கான சிகிச்சை தேவை. (3) 'எய்ட்ஸ்' நோய் தொடர்புடைய, நெஞ்சு வலி, பேதி, படிப்படியாக அதிகரிக்கும் மனச் சீர்கேடு போன்ற சிக்கல்கள் தோன்றுதல். (4) குணப்படுத்த முடியாத முழுமையான 'எய்ட்ஸ்' நோய்.

acquired immunity : பெற்ற தடுப்பாற்றல்.