பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

305


நிறையழிந்து எழுதரு தானைக்குச்

சிறையும் தானே - தன் இறைவிழு முறினே.

அவ் வீரன் யாவனோ எனின், மனைக்கு விளக்கமாகத் திகழ்கின்றனளே அவ்வொளி பொருந்திய நுதலுடையாள், அவளுடைய கணவன்தான் அவன்.வேல்நுனிக்கே எல்லையெனும் படியாகக் கூரிய வெற்றிவேலினைக் கைக்கொண்டு வருபவன் அவன். மறவர் பலர் வாழ்ந்து நடுகல் ஆயின தழைமலிந்த புறங்காடும், புல்லிய வித்துடைய நெல்லியும் விளங்கும் வன்புலச் சிற்றுாரிலே வாழ்பவன். அவர்கள் குடும்பமும் புகழ் நிறைந்தது. அவனும், வேந்தனுக்குப் பகைவரால் துயரம் என்றால், தானே கொடியினை உயர்த்து, நிறையடங்காது எழுந்து வரும் பகைவரின் பெருந்தானையையும் எதிர்நின்று தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்கவன்!

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(பாட்டுடைத் தலைவனின் பெயர் நெடுமான் அஞ்சி (3) என வருவது காண்க. படைமுகத்திலே அவன் தோன்றும் நிலையை இல்லிறைச் செரீஇயஞெலிகோலுக்கு ஒப்பிடுகின்றனர்)

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன், கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி; இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5

கான்றுபடு கனைஎரி போலத் தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே.

உணவு இருந்தால், அதனைத் தன்பால் வருபவர்க்கு உவப்புடன் ஈத்து உண்ணவும் வல்லவன்; வேண்டாதாராயினும், மடவரேயாயினும், இரவலராகவரின் ஈத்து, அவர்கள் மகிழ அவர்களுக்குத் துணையாகவும் விளங்குபவன் நெடுமான் அஞ்சி. வீட்டிறைப்பிலே செருகிய தீக்கடை கோலினைப் போலத் தன் ஆண்மை தோற்றாது அவருடன் விளங்கவும் வல்லவன். பகைவர் போரிடத்தே தோன்றினால், அக் கடை கோலிலிருந்து புறப்படும் எரிபோலத் தோன்றி, அவரை அழிக்கவும் வல்லவன் அவன். (கடவர் தன்னைக் கடந்தவர்; அயலார், மடவர் அறியாமை யுடையோர், பெண்பாலர் எனினும் ஆகும்)