பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

199


(அறிவுடை வேந்தனது அரசியல் இவ்வாறிருத்தல் வேண்டுமென அறிவுறுத்துவது செய்யுள். 'வாயுறை வாழ்த்திற்கு' எடுத்துக்காட்டுவர் இளம்பூரணனார் (தொல், புறத். சூ. 29)

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5

கோடியாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போலத், #f - 10 தானும் உண்ணான், உலகமும் கெடுமே!

ஒரு மாவுக்குக் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பல நாட்களுக்கும் அது வரும்; யானையும் பலநாட் பசியடங்கி இன்புறும். அல்லாது, நூறு செய்யாயினும், தன் போக்கிலே யானை சென்று தின்னப் புகுந்தால், அது உண்ட நெல்லினும் அதன் காலடி பட்டு அழிவெய்தியதே மிகுதியாகிவிடும். இதே போன்று, அறிவுடைய வேந்தன் அறநெறியறிந்து குடிகளிடம் இறை கொண்டால், கோடிக்கணக்கான செல்வம் பெற்று அவனும் இன்புறுவதுடன், அவனது நாடும் செழிக்கும். அஃதன்றி, அவன் அறியாமையை உடையவனாக, அவன் மந்திரச் சுற்றமும் அறங்கூறாது அவன் போக்கையே ஆதரித்து நிற்பவராக, குடிகளை வற்புறுத்தி அறமற்ற பெருந்தொகையான இறையைப் பெறவிரும்பினால், அதனால் அவனுக்கும் அவன் நாட்டுக்கும் கேடுதான் விளையும். -

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி (இஃது உலகாளும் , முறைமையைக் கூறியதாம்.) -

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்

காவற் சாகாடு உகைப்போன் மாணின்,

ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே,

உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,

பகைக்கூழ் அள்ளற் பட்டு, 5

மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே.