பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

புறநானூறு - மூலமும் உரையும்


தரப்பட்டதாகும். எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங்களைவோன்’ எனத் திருமாலைப் போற்றும் இவர், ஒன்றே பலவாகவும், பலவும் ஒன்றாகவும் விளங்கும் இறைமைச் செவ்வியையும் எடுத்துக் கூறுகின்றார்.

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி.எனின், உலகுடன் பெறினும் கொள்ளவர்'

என, மாட்சியுடையோரின் தன்மையை இப் புறநானூற்றுச் செய்யுள் காட்டுகின்றது. அத்தகைய மாட்சி அமைந்தவர் இவர் எனவும் கருதலாம்.

கண்ணகனார் 218

இச் செய்யுளோடு நற்றிணை 79 ஆம் செய்யுளும் இவர் பாடியனவாக வழங்கும். இவர் கோப்பெருஞ் சோழன் காலத்தவர். பரிபாடலின் 21 ஆம் செய்யுளுக்கு இசை வகுத்தவர் என்பதனால், சிறந்த இசை வல்லாராக விளங்கியவர் எனலாம். பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்தார். அவருடைய ஒப்பற்ற அன்புச் செறிவு இவரைக் கவர்ந்ததனால், எழுந்த செய்யுள் இது. என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே என்று, உலக மக்களின் இயல்பைத் திட்பமாகக் கூறியுள்ளார். இவர்.

கணியன் பூங்குன்றனார் 192

இச் செய்யுளோடு நற்றிணையின் 226 ஆம் செய்யுளும் இவர் பாடியதாக வழங்கும். 'பூங்குன்றம் இராமநாதபுரக் கோட்டத்து எல்லைக்குள் பண்டிருந்த ஒர் ஊர் ஆகும். அவ்வூரவர் இவர். கணிதத்தில் வல்லவராயினமை பற்றிக் கணியன்’ என்னும் அடைமொழி பெற்றனர். பயனுடைப் பொருளையும் அளவறிந்தே கொள்ளல் அறிவுடைமை; அஃதன்றி அப் பொருளே அழியக் கொள்ளல் பேதைமையாகும். இதனை, மரஞ்சா மருந்தும் கொள்ளார்; மாந்தர் உரஞ்சாச் செய்யார் உயர்தவம், வளங்கெடப் பொன்னுங் கொள்ளார் மன்னர் எனத் தெளிவுறக் கூறியவர் இவர் (நற்226), "யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கிச் சிறந்த உறுதிப் பொருள்களை இச் செய்யுளிலும் இவர் எடுத்துரைக்கின்றனர். கபிலர் 8, 14, 105 - 111, 113, 124, 200 - 202, 236 337, 347

இவர் அந்தணர், வேள் பாரியின் உளங்கலந்த நண்பர், துறவு வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்தவர். பாண்டிநாட்டுத்

திருவாதவூரில் பிறந்தவர். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என (புறம் 126) மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் போற்றுவர்.