உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

35

 கவியரசர் முடியரசன்


                       கனவின் நிழல்

உள்ளத்து மாசகற்ற ஒதும் புலவனுக்குத் தெள்ளத் தெளிந்து திருநாள் எடுத்தவர்கள் பாடென் றெனக்கோர் பணிதந்து விட்டமையால் ஏடொன் றெடுத்தே எழுத முனைந்திருந்தேன் பேரறிவு கூடிப் பிறந்திங்கு வந்தது போல் கூரறிவு கொண்ட குறளடியான் என்முன்னே வந்து நகைத்துநின்றான்; வாவென்றேன் யாரென்றேன்; 'முந்து தமிழ்மாலை முனைந்து புனைவோனே! ஈரா யிரத்தாண்டின் முன்னே எழுந்தவன்யான் ஒரா திருந்தனையே உன்னறிவை என்னென்பேன்! என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளில் என்னை யறியா திருக்கின்றாய், என்றுரைத்தான்; சொன்ன குறிப்பாலே துயமறை தந்தவனை முன்னவனை முப்பால் மொழிந்தவனைக் கண்டுணர்ந்து செந்தமிழ்த்தாய் தந்த திருமகனே நின்னுருவம் எந்தவிதம் உண்டென்று யானறியேன், எங்குள்ளோர் கண்டபடி கைவண்ணங் காட்டிப் பலவடிவம் கொண்டமைத்து விட்ட கொடுமையினால் மெய்வடிவம் காண வியலேன் கடியா தெனைப்பொறுப்பாய் பேணி உனைவணங்கும் பெற்றிமையன் நானையா என்றப் பெரியோன் இண்ையடியைப் பற்றிநின்றேன்; 'நன்று தமிழ்மகனே நான்மொழிந்த முப்பாலை ஒதி யுணராமல் ஒதும் நெறிநிற்க