வள்ளவர் கோட்டம்●
34
● கவியரசர் முடியரசன்
ளுவர் கோட்டம் ) 34 கவியரசர் முடியரசன்
முற்போக்குப் பெருவெள்ளம் திரண்டு ருண்டு முழுமூச்சில் எதிர்த்தோடிப் பெருகும் நாளில் பிற்போக்குக் கும்பலெலாம் ஒன்று கூடிப் பிழையான செயல்செய்ய நினைந்து பேசிக் கற்பாறை யிட்டதனைத் தடுக்கக் கண்டோம்; கற்களெல்லாம் சிதறுண்டு போயிற் றன்றே; பிற்பாடும் மடமுடையார் தடுத்தால் அந்தப் பெருவெள்ளம் தடைபட்டு நின்றா போகும்?
பாரதியென் றுரைக்குமொரு பருவமேகம் \o - பாரதிக்குத் தாசனென்னும் கரிய மேகம் பாரதிர முழங்கிவரும் இன்ளைஞர் கட்டப் பரம்பரையாம் கோடைமுகில் அனைத்துங் கடி ஊரதிர இடிஇடித்து மின்னல் கட்டி ஒயாது மழைபொழிய வெள்ளம் பொங்கிச் சிறிவரும் வேகத்தில் அந்தக் கும்பல் சிறுவர்விடு கப்பலென மூழ்கிப் போகும்.
உள்ளத்தை உயிர்தன்னை உயிரைத் தாங்கும் உடல்தன்னை வள்ளுவற்குப் பின்னே போக்கி வள்ளுவத்துக் கோட்பாட்டை நன்கு ணர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நிற்போம்; வள்ளுவத்தைப் பெற்றதிரு நாட்ட கத்தே வாழ்கின்ற பேறுற்றோம்; ஆத லாலே பள்ளத்தில் விழாமல் இன்ப வானில் பறக்கின்ற நிலைபெறுவோம் வாரிilவாரீர்!
+ 4 + 4- 4 -