வள்ளவர் கோட்டம்●
33
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 33 கவியரசர் முடியரசன்
காதலெனும மென்மலரைக் கசக்கி விட்டோம் கற்றவரும் அதன்செவ்வி உணர்ந்தோ மல்லோம் ஒதலிலே திரைதனிலே எழுதும் நூலில் உரைப்பதிலே காதலைத்தான் உயர்த்திச் சொல்வோம் காதலது நம்விட்டில் புகுந்து விட்டால் கனன்றெழுவோம் சாதியெனும் வாளெ டுப்போம் மோதியதன் நெஞ்சத்தைப் பிளப்ப தற்கே முனைந்திடுவோம் கண்மூடிச் செயலே செய்வோம்.
சாக்காடு நோக்கிநடை போடும் போதும் சாதிக்கே நடைபாதை போடு கின்றோம்; வாக்காளர் நடத்துதிரு நாளிற் கட வள்ளுவனே தோற்கின்றான், சாதி வெல்லும்; வேக்காடு சாதிக்கு வைக்கும் நாளே வியனுலகப் புகழ்நமக்குக் கிட்டும் நாளாம்; நோக்காடு கொண்டொழுகுஞ் சமுதா யத்தில் நூறுவகைச் சாதிகளாற் பயனே இல்லை.
பார்ப்பானைச் சுடுகின்ற காடும் உண்டு பறையனுக்குச் சுடுகாடு தனியே உண்டு ஆர்ப்பரிக்குஞ் சமயங்கள் பலவுண் டென்றால் அத்தனைக்கும் தனித்தனியே சுடுகா டுண்டு மேற்போன கடவுளர்க்குஞ் சாதி யுண்டு மேதினியைச் சீர்குலைக்கும் பிற்போக் காளர் ஏற்பாடு தொலையும்வரை வள்ளு வற்கே எடுக்கின்ற திரு நாளாற் பயனே யில்லை
- செவ்வி - தகுந்த சமயம், அருமை