வள்ளவர் கோட்டம்●
30
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 30 கவியரசர் முடியரசன்
பாருலகப் பேரறிஞன் பாவலனாம் வள்ளுவன்றன் கரறிவுப் பேருணர்வால் கறிவைத்த பொன்மொழியை நானிலமே உய்வதற்கு நாவல்லான் சேர்த்துவைத்த மாநிலமே காணாத மாநிதியைப் பெற்றிருந்தும் அப்பெருமை தேர்ந்துணர அவ்வழியிற் சென்றொழுக எப்பொழுதுஞ் சிந்திக்க இங்கே திறனில்லை; என்று நினைந்திரங்கி ஏங்கிக் கவலையினால் ஒன்றும் புரியாமல் உள்ளந் துவண்டிருந்தேன்; ஆங்கே எனதருகில் ஆணழகன் ஒர்மகன்தான் தீங்கே தெரியாத தெய்வத் திருமகன்போல் வந்து கருணையுடன் வாலறிவன் நின்றருளைச் சிந்தும் விழியாற் சிறிதென்னை நோக்கியிதழ்ப் புன்னகை செய்தான்; புலவனவன் புன்சிரிப்பில் என்ன பொருளென் றுணர இயலவில்லை! ஏளனமா? அன்றி இரக்கத்தின் காரணமா? தாளமென உள்ளந் தவிதவித்தேன்; அம்மகனை நோக்க நிமிர்ந்தேன் நுழைபுலத்தான் அவ்விடத்தை நீக்கி மறைந்தான் நினைந்து.
米米米米米