வள்ளவர் கோட்டம்●
96
● கவியரசர் முடியரசன்
நல்ல குடும்பம் Ни: விருந் தோம்; வேளாண்மை வேட்கையுடன் நாளும் இருந்தோம்பி நிற்கும் இயல்புடைய பேருளமும், ஒவ்வொருவர் நெஞ்சத்தும் உற்ற குறிப்புணர்த் தவ்வவர்க்கும் ஏன்றகடன் ஆற்றுஞ் செயற்றிறனும், குற்றம் பொறுக்கின்ற கொள்கைத் திறந்தாங்கி மற்றவரைப் போற்றி மதிக்கும் மனப்பண்பும், பெற்றவரைப் பேணிப் பெருமை தரநடக்கக் கற்றறிந்து தங்கடமை காக்கும் மகப்பேறும் கொண்டிலங்கும் நல்ல குடும்பந்தான் பல்கலைகள் கொண்ட கழகமென முன்னோர் குறித்துரைத்தார்; அக்கழகங் காக்கின்ற ஆற்றல் மிகக்கொண்ட தக்கஇணை வேந்தரெனத் தந்தையைத்தான் சொல்லிடலாம்; வீட்டின் அகத்திருந்து வேண்டும் பணிபுரிந் துரட்டி வளர்க்கின்ற ஒப்பில்லா அன்புளத்துத் தாயே துணைவேந்தர், தாளாற்றி நாளெல்லாம் ஒயா துழைத்துவரும் உள்ளன்பு கொண்டிலங்கும் நாயகனும் நாயகியும் நல்லபேராசிரியர் ஆயும் அறிவெல்லாம் அன்னவர்தாம் சேர்ப்பர்; சிறுகுறும்பு செய்யுஞ் சிறு மகா ரெல்லாம் அருகிருந்து கல்வியறிவுபெறும் மாணவராம்; ஆதலினால் இல்வாழ்வை ஆர்ந்த பல்கலைகள் ஒதுங் கழகமென ஒப்பிட்டுரைத்தார்கள்;