உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்நாளோ? அறத்தாலே வருவதுதான் இன்ப மென்றே ஆதிமகன் ஒதிவிட்டான், வேறு வேறு திறத்தாலே வருவதுதான் இன்பம் போலத் தெரிந்தாலும் நிலையான இன்பம் அன்று; மறத்தாலே பெறத்தானே முயலுகின்ற ± மாந்தரையே காணுகின்றோம்; அதனை நீக்கும் குறிப்பேனுங் காணவிலை; கோவில் கட்டிக் கொலுவைக்குங் கடவுளர்க்குங் குறைவே யில்லை, வள்ளுவனை உலகினுக்குத் தந்து நின்று வான்புகழைத் தமிழ்நாடு பெற்ற தென்று அள்ளுதமிழ்ப் பாரதிதன் பாட்டிற் சொன்னான்; அதன்பொருளை ஒர்ந்துணர மாட்டாதாகி, வள்ளுவனை விற்றதுபோல் நினைந்து கொண்டு, வள்ளுவற்கும் நமக்குமினி உறவே இல்லை உள்ளுவதும் முறையிலைஎன்றெண்ணிப் போலும் ஒதுக்கியது தமிழ்மறையைத் தமிழர்நாடு.