பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளும் ஏசுவும் நிலைமண்டில ஆசிரியப்பா ஞாலம் உணர ஞான ஒளியால் சிலம் பெருகிடச் செப்பிய பெருமான், மக்கள் வாழ்வு மலர்ந்திட வேண்டி மிக்க துயரம் மேவிய அண்ணல், அன்பின் உருவம், அருள்பொழி விழிகள், துன்பந்துடைக்கத் தோன்றிய துரதர், பொன்முடி சூட்டப் புரியா மாக்கள் முண்முடி சூட்டி முடித்த ஞான்றும் எரிவாய் நரகம் எய்துவர் அவரென அவர்நிலைக் கிரங்கி ஆண்டவன்றன்பால் வேண்டி நின்றனர்: 'வினைபுரி இவர்தாம் அறியா தியற்றினர் அவர்பிழை பொறுப்பாய் என்றருள் பொழிந்தனர் ஏசு பெருமான்; இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்கெனச் சொன்ன குறளில் தோய்ந்துள பொருளை மாசிலா மைந்தர், மாநிலம் போற்றும் ஏசுவின் செயலில் கண்டனம் இனிதே.