உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 9 106 ைகவியரசர் முடியரசன் முற்றியே நெஞ்சில் தோன்றி முதிர்ந்திடும் கலைஞர் ஆசை, சிற்றுளி செதுக்கும் ஒசை சேர்ந்தெலாம் ஒன்றாக் கடிப் பெற்றதங் குருவம் ஒன்று பெரும்புகழ்க் கோட்ட மாக நற்றமிழ் உள்ளம் வாழ்த்தி நாடெலாம் மகிழ்ந்த தன்று. தென்றிசை நோக்குங் கோட்டம் திராவிடர் கலையைக் காட்டும் இன்றும்அக் கலையில் வல்லார் இருப்பதைச் சிற்பங் காட்டும் மன்றினை முழுதுங் கண்டார் மனத்தினில் வியப்பைக் காட்டும் ஒன்றதற் குவமை சொல்வார் உளத்தினில் மயக்கங் காட்டும். தொழில்முறை சிறந்து காட்டும் தோரண வாயிலுள்ளே துழைபவர் தமைம றப்பர் துண்ணிய ராய்மிதப்பர் எழில்மிகு மைய மன்றில் ஏந்திடும் துாண்க ளில்லை அழகிய கலைகள் காட்டும் அரங்கமும் அங்கே உண்டு.