பூங்கொடி
95
100
105
110
115
புதுநூல் படைப்புக் குழு
முன்னேர் நெறியின் முரண்பா டின்றிப் பன்னுரல் ஆக்க உன்னுவோர் தாமும் பின்னேர் நம்மைப் பேணும் வகையால் நன்னூல் ஆக்க நயப்போர் தாமும் பொருளால் நடையால் புதுப்புது முறையால் உரையால் கவியால் வரைவோர் தாமும் அறிவியல் ஆால்கள் ஆய்வுரை நூல்கள் செறிவொடு பிறபிற செய்வோர் தாமும் கிறைபுல மாங்கர் நெருங்கிய குழுவும்,
வழு உக் களைவோர் குழு
ஆவணக் கெருவினில் அரசியல் துறைகளில் கோவிலில் செய்திகள் கொடுத்திடும் இதழ்களில் மேவிய திரைப்பட மாகிய உலகில் எழுத்தில் பேச்சில் எவ்வெக் துறையிலும் வழுக்கள் களைந்து வண்டமிழ் வளர்ப்போர் தொகுப்பாய்ப் பணிசெயும் தொண்டர்தம் குழுவும்,
அறப்போர் ஆற்றுங் குழு
புதியதோர் மன்பதை பூத்திட வேண்டி அறிவியல் பயிற்றிடும் அரும்பெறற் பள்ளியில் புரிவியல் மொழியால் போற்றுநம் மொழியால் புகட்டிட வேண்டிப் போரிடுங் குழுவும், தாய்த்திரு நாட்டில் தண்டமிழ்க் கெதிராய் ஏய்ப்பவர் புகுத்திடும் எம்மொழி யாயினும் மேய்ப்பவர் மருளக் காழ்ப்பகை சிதற அறப்போர் கொடுக்கும் ஆண்மையர் தமிழ்மொழி புரப்போர் பலராப்ப் போரிடுங் குழுவும்
226