உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

கூத்தர் காலப் புலவர்கள்

சோழர் காலம் புலவர் பலர் வாழ்ந்த பொற்காலம். ஒட்டக்கூத்தர் காலத்தில் நம்பி காளியார், நெற்குன்ற வான முதலியார், தமிழ்த்தண்டி ஆசிரியர் ஆகிய பலர் வாழ்ந்தனர்.

ஒட்டக்கூத்தர் கடைசியாக இராஜராஜன் விருப்பப்படி உறந்தையிற்றானே தங்கியிருந்து தமது 97 ஆம் வயதில் பரிபூரணம் அடைந்தார். அவரடைந்த திருநகஷத்திரம் ஆவணி மாத உத்திராடம் என்ப. 24

  • உத்திராட நகrத்திரம் ஒட்டக்கூத்தர் பரிபூரண தினமாகக் கொண்டு ஆவணி மாதத்தில் மதுரை, காஞ்சி, உறந்தை, கமலை முதலிய பல இடங்களில் கொண்டாடப் படுகிறது.??

(ஆ) நூல்களும் அவை நுவலும் பொருள்களும்

பொதுச் செய்திகள்

இப்பகுதியில் கூத்தரின் இலக்கியப் பணிகள் ஆராயப் படுகின்றன.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

செயங் கொண்டான் விருத்தம் என்னும் ஒண்பா விற்கு உயர் கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன்

21. காஞ்சி நாகலிங்க முனிவர், செங்குந்தர் பிரபந்தத்

திரட்டு பதிப்பாளருரை, ப. 74.

22. காஞ்சி நாகலிங்க முனிவர், செங்குந்தர் பிரபந்தத்

திரட்டு பதிப்பாளருரை, பக். 75.