36 பாரதியும் பாரதிதாசனும் நேரிடுகிறது. அதனைப் புலப்படுத்தும்பொழுது பாரதி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் : பேரழகு கொண். பெருத்தவத்து நாயகியைச் சீரழியக் கூந்தல் சிதையக் கவர்த்துபோய் கேடுற்ற மன்னரறம் கெட்ட சபைதனிலே கூடுதலும் அங்கே போய்க்கோ என்று அலறினாள். மேலும் கேடுற்ற மன்னரறம் கெட்ட சபை தனில்" தன்னை மணந்த ஐவரும் குதற் தன்னைத் தோற்றுத் தலைகுனிநது இருநத நிலையினையும், துரியோதனன் அவையில் வீற்றிருந்த பிற பெரியவர்கள் வாய்மூடி வாள விருந்த நிலையினையும் ஒருங்கே கண்டு உள்ளம் பதைத்துப் பின் வருமாறு பேசினாள் : பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர் பெண்பாவம் அன்றோ பெரியவசை கொள்வீரோ கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள். இ ந் த க் கருத்திலேதான் சுப்பிரமணிய சிவா முதலானோர் சிறையில் அல்லற்பட்ட அவல நிலையினை யும், வ. உ. சிதம்பரனார் போன்ற நல்லறிஞர் செக்கிழுத்த் ர்ேகெட்ட நிலையினையும் ஒருங்கே எண்ணித் துடிக்கும் பாரதியார் பின்வருமாறு தம் எண்ணங்களைப் பாட்டிற் புலப்படுத்தியுள்ளார் : மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் _ நோவதுவும் காண்கிலையோ?
பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/36
Appearance