சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/12.வேட்டுவ வரி
Appearance
சிலப்பதிகாரம்
[தொகு]இரண்டாவது மதுரைக்காண்டம்
[தொகு]12.வேட்டுவ வரி
[தொகு]- கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
- ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
- நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
- ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
- வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் 5
- வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
- பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
- தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
- கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
- இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் 10
- நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
- கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
- வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
- மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
- அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் 15
- கலையமர் செல்வி கடனுணின் அல்லது
- சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
- மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
- கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
- இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது 20
- சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
- சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
- குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
- இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
- வளைவெண் கோடு பறித்து மற்றது 25
- முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
- மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
- மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
- வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
- உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 30
- கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
- திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
- பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
- கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
- பந்துங் கழங்குந் தந்தனர் பரசி 35
- வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
- புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
- பூவும் புகையும் மேவிய விரையும்
- ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
- ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் 40
- கோடும் குழலும் பீடுகெழு மணியும்
- கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
- விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
- கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
- இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் 45
- கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
- இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
- தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
- ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
- திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் 50
- பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
- அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
- விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
- மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
- நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 55
- பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
- நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
- அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
- துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
- வளையுடைக் கையிற் சூல மேந்தி 60
- கரியின் உரிவை போர்த் தணங் காகிய
- அரியின் உரிவை மேகலை யாட்டி
- சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
- வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
- இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் 65
- தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
- அமரி குமரி கவுரி சமரி
- சூலி நீலி மாலவற் கிளங்கிளை
- ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
- பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை 70
- ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
- தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
- அமரிளங் குமரியும் அருளினள்
- வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
- உரைப்பாட்டுமடை.
- வேறு
- நாகம் நாறு நரந்தம் நிரந்தன 1
- ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
- சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
- பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;
- செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் 2
- கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
- பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
- திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;
- மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் 3
- குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
- அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
- திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;
- வேறு
- கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் 4
- பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
- பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
- விற்றொழில் வேடர் குலனே குலனும்;
- ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் 5
- பையர வல்குல் தவமென்னை கொல்லோ
- பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
- எய்வில் எயினர் குலனே குலனும்;
- பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் 6
- ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
- ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
- வேய்வில் எயினர் குலனே குலனும்;
- வேறு
- ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் 7
- கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
- வானோர் வணங்க மறைமேல் மறையாகி
- ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;
- வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் 8
- கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
- அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
- விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;
- சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் 9
- செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
- கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
- மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;
- வேறு
- ஆங்குக், 10
- கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
- துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
- அசுரர் வாட அமரர்க் காடிய
- குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;
- வேறு
- ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப 11
- மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
- மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
- காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;
- உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை 12
- வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
- வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
- கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;
- கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் 13
- புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
- புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
- கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்
- வேறு
- இளமா எயிற்றி இவைகாண் நின் னையர் 14
- தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
- கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
- நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;
- முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் 15
- கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
- கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
- புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;
- கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் 16
- அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
- நயனில் மொழியின் நரைமுது தாடி
- எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.
- வேறு
- சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் 17
- இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
- அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
- மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;
- அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு 18
- மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
- கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
- நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;
- துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய 19
- வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
- அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
- படுகடன் இதுவுகு பலிமுக மடையே;
- வேறு
- வம்பலர் பல்கி வழியும் வளம்பட 20
- அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
- சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
- செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;
- துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு 21
- கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
- விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
- உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;
- பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் 22
- அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
- மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
- உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;
- வேறு
- மறைமுது முதல்வன் பின்னர் மேய 23
- பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
- கட்சியும் கரந்தையும் பாழ்பட
- வெட்சி சூடுக விறல்வெய் யோனே.
- பார்க்க