உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

லட்சியம் எல்லாத்தையும் படிச்சறிஞ்சுக்கிட்டதிலேயிருந்து தான் நான் — இந்த ஏழை உங்ககிட்டே உரிமையோடு — மனிதாபிமானக் கடமையோடு —இப்படி வெட்ட வெளிச்சமாய்ச் சொல்லுறேன்! அப்படி நீங்க உங்க ராஜாவுக்கு ஒரு இரண்டாவது அம்மாவைக் கொடுத்தால்தான், நீங்க நம்பியிருக்கிறபடி, உங்க தெய்வம் உங்க ராஜாவை வளர்க்க முடியும்!.... வளர்த்துக் காப்பாத்தவும் முடியுமுங்க, அண்ணாச்சி!...”

சிவஞானத்தின் விழி வரம்புகளில் கண்ணீர் வரம்பின்றிச் சிதறிக்கொண்டேயிருந்தது.

ராமையா உண்மையிலேயே ஒரு ரிக்ஷாக்காரன்தானா?....