குதம்பைச் சித்தர்
Appearance
குதம்பைச் சித்தர் பாடல்கள்
- பக்கம் 224 - 227
1
[தொகு]- வெட்ட வெளி தன்னை
- மெய்யென்(று) இருப்போர்க்குப்
- பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
- பட்டயம் ஏதுக்கடி
2
[தொகு]- மெயப்பொருள் கண்டு
- விளங்குமெய்ஞ் ஞானிக்குக்
- கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
- கற்பங்கள் ஏதுக்கடி
3
[தொகு]- காணாமற் கண்டு
- கருத்தோடு இருப்பார்க்கு
- வீணாசை ஏதுக்கடி – குதம்பாய்
- வீணாசை ஏதுக்கடி
4
[தொகு]- வஞ்சகம் அற்று
- வழி தன்னைக் கண்டோர்க்குச்
- சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய்
- சஞ்சலம் ஏதுக்கடி
5
[தொகு]- ஆதா ர மான
- அடிமுடி கண்டோர்க்கு
- வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
- வாதாட்டம் ஏதுக்கடி
6
[தொகு]- நித்திரை கெட்டு
- நினைவோடு இருப்போர்க்கு
- முத்திரை ஏதுக்கடி – குதம்பாய்
- முத்திரை ஏதுக்கடி
7
[தொகு]- தந்திர மான
- தலந்தனில் நிற்போர்க்கு
- மந்திரம் ஏதுக்கடி – குதம்பாய்
- மந்திரம் ஏதுக்கடி
8
[தொகு]- சத்திய மான
- தவத்தில் இருப்போர்க்கு
- உத்தியம் ஏதுக்கடி – குதம்பாய்
- உத்தியம் ஏதுக்கடி
9
[தொகு]- நாட்டத்தைப் பற்றி
- நடுவணை சேர்வோர்க்கு
- வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
- வாட்டங்கள் ஏதுக்கடி
10
[தொகு]- முத்தமிழ் கற்று
- முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
- சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
- சத்தங்கள் ஏதுக்கடி
11
[தொகு]- உச்சிக்கு மேற்சென்று
- உயர்வெளி கண்டோர்க்கு
- இச்சிப்பிங்கு ஏதுக்கடி – குதம்பாய்
- இச்சிப்பிங்கு ஏதுக்கடி
12
[தொகு]- வேகாமல் வெந்து
- வெளியொளி கண்டோர்க்கு
- மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பாய்
- மோகாந்தம் ஏதுக்கடி
13
[தொகு]- சாகாமல் தாண்டித்
- தனிவழி போவோர்க்கஃ
- ஏகாந்தம் ஏதுக்கடி – குதம்பாய்
- ஏகாந்தம் ஏதுக்கடி
14
[தொகு]- அந்தரந் தன்னில்
- அசைந்தாடு முத்தர்க்குத்
- தந்திரம் ஏதுக்கடி – குதம்பாய்
- தந்திரம் ஏதுக்கடி
===15---
- ஆனந்தம் பொங்கி
- அறிவோடு இருப்பார்க்கு
- ஞானந்தான் ஏதுக்கடி – குதம்பாய்
- ஞானந்தான் ஏதுக்கடி
16
[தொகு]- சித்திரக் கூடத்தை
- தினந்தினம் காண்போர்க்கு
- பத்திரம் ஏதுக்கடி – குதம்பாய்
- பத்திரம் ஏதுக்கடி
17
[தொகு]- முக்கோணம் தன்னில்
- முளைத்த மெய்ஞ் ஞானிக்குச்
- சட்கோணப் ஏதுக்கடி – குதம்பாய்
- சட்கோணம் ஏதுக்கடி
18
[தொகு]- அட்டதிக் கெல்லாம்
- அசைந்தாடும் நாதர்க்கு
- நட்டணை ஏதுக்கடி – குதம்பாய்
- நட்டணை ஏதுக்கடி
19
[தொகு]- முத்தி பெற்றுள்ளம்
- முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
- பத்தியம் ஏதுக்கடி – குதம்பாய்
- பத்தியம் ஏதுக்கடி
20
[தொகு]- அல்லலை நீக்கி
- அறிவோடு இருப்பார்க்குப்
- பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பாய்
- பல்லாக்கு ஏதுக்கடி
21
[தொகு]அட்டாங்க யோகம்
- அறிந்த மெய்ஞ் ஞானிக்கு
- முட்டாங்கம் ஏதுக்கடி – குதம்பாய்
- முட்டாங்கம் ஏதுக்கடி
22
[தொகு]- வேகம் அடக்கி
- விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
- யோகந்தான் ஏதுக்கடி – குதம்பாய்
- யோகந்தான் ஏதுக்கடி
23
[தொகு]- மாத்தனை வென்று
- மலைமேல் இருப்போர்க்குப்
- பூத்தானம் ஏதுக்கடி – குதம்பாய்
- பூத்தானம் ஏதுக்கடி
24
[தொகு]- செத்தாரைப் போலத்
- திரியு மெய்ஞ் ஞானிக்கு
- கைத்தாளம் ஏதுக்கடி – குதம்பாய்
- கைத்தாளம் ஏதுக்கடி
25
[தொகு]- கண்டாரை நோக்கிக்
- கருத்தோடு இருப்பார்க்குக்
- கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
- கொண்டாட்டம் ஏதுக்கடி
26
[தொகு]- காலனை வென்ற
- கருத்தறி வாளர்க்கு
- கோலங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
- கோலங்கள் ஏதுக்கடி
27
[தொகு]- வெண் காயம் உண்டு
- மிளகுண்டு சுக்குண்டு
- உண் காயம் ஏதுக்கடி – குதம்பாய்
- உண் காயம் ஏதுக்கடி
28
[தொகு]- மாங்காய்பால் உண்டு
- மலைமேல் இருப்போர்க்குத்
- தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பாய்
- தேங்காய்ப்பால் ஏதுக்கடி
29
[தொகு]- பட்டணஞ் சுற்றிப்
- பகலே திரிவார்க்கு
- முட்டாக்கு ஏதுக்கடி – குதம்பாய்
- முட்டாக்கு ஏதுக்கடி
30
[தொகு]- தாவார மில்லை
- தனக்கொரு வீடில்லை
- தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய்
- தேவாரம் ஏதுக்கடி
31
[தொகு]- தன்னை அறிந்து
- தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
- பின்னாசை ஏதுக்கடி – குதம்பாய்
- பின்னாசை ஏதுக்கடி
32
[தொகு]- பத்தாவுந் தானும்
- பதியோடு இருப்பார்க்கு
- உத்தாரம் ஏதுக்கடி – குதம்பாய்
- உத்தாரம் ஏதுக்கடி.