உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:அருணகிரிநாதர்

விக்கிமூலம் இலிருந்து
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

அருணகிரிநாதர்
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

படைப்புகள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:அருணகிரிநாதர்&oldid=1506594" இலிருந்து மீள்விக்கப்பட்டது