மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/யாம் வேண்டுவது பரிசில் அல்ல!
Appearance
குளிரால் நடுங்கிய தென்று கருதி கோல மயிலுக்குத் போர்வை அளித்த மன்னவா, நாங்கள் உன்னை வேண்டி வந்தது பரிசில் அல்ல!
களாக் கனி போன்ற கரிய யாழை நாங்கள் மீட்டினோம். அது கேட்டு நீ தலையாட்டினாய், இனிய இரையை சுவைத்தாய். எங்கள் இசையின்பத்தைப் பருகிய பின் நாங்கள் கேட்கும் வரம் கொடுக்க வேண்டியதும் நியதியேயாகும். "மறுக்காதே மன்னா. இன்று இரவோடே தேர் பூட்டிச் செல், துன்புறும் உன் மனைவியின் கண்ணிரைத் துடை! அவ்வரத்தையே யாம் வேண்டினோம்... மறுக்காமல் தந்தருள்க” பேகனுக்குப் பரணர் விடுத்த வேண்டுகோள் இது.