விக்கிமூலம் பேச்சு:கூகுள் எழுத்துணரியாக்க விளைவில் நீக்க வேண்டியவைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
  • தேவை-1
    • திரும்ப திரும்ப வரும் தேவையற்ற குறியீடுகளை நீக்குதல் வேண்டும். ஏனெனில், இவற்றை ஒவ்வொன்றாக நினைவில் வைத்து நீக்குதல் மிகவும் கடினம். ஏனெனில், இவை தமிழ் சார்ந்த குறியீடுகள் அல்ல. இதற்கான தனி பைத்தான் நிரலாக்கம்(..finding duplicates) தேவைப்படுகிறது.-- உழவன் (உரை) 10:15, 27 பெப்ரவரி 2018 (UTC)

தீர்வு இத்தேவையை, எனது இந்த முதல் முயற்சி தீர்க்கும்-- உழவன் (உரை) 03:30, 1 மார்ச் 2018 (UTC)

சுருங்குறித் தொடர்[தொகு]

@Info-farmer:விக்கிமூலத்தில் தமிழ் ஆங்கிலம் அல்லாத எழுத்துகள் அதிகமாக உள்ளது. அவைகளை ​நீக்குவதற்கு தானியங்கி வழி ஒன்றை சோதித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், கணிதம், பொது குறியீடுகள், எண்கள் தவிர மற்றவைகளை நீக்குமாறு regexஇல்

தேடு: ([^\u0B80-\u0BFF\x00-\x7F\u2000-\u206F\u2200-\u22FF\u0370-\u03FF\ufeff\u2070-\u209F])+

மாற்று:

முறையில் முயற்சி செய்கிறேன்.

இதில் ஏதாவது பிழை யிருக்கக் கூடுமா? வேறு முறை உள்ளதா? இந்த முறையில் superscript அழிக்கப்படுகிறது. அதற்கு என்ன வழி? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:25, 28 பெப்ரவரி 2018 (UTC)

superscript என்று எதைக்கூறுகிறீர்கள்? 103 என்பதில் 3 என்பதையா? ஒவ்வொரு நூலாக செய்ய வேண்டிய மாற்றங்கள் வேறுபடுகின்றன. நீங்கள் மேலடி எழுதுதல் பற்றி கூறியதை நினைவு கூறுகிறேன். எனவே, நீக்குதலில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, முடிந்தவரை, குறியீடுகளை மாற்றிப் பார்ப்போம். ஒவ்வொரு மாதமும், ஒரு நூல் என மெய்ப்புப்பணி திட்டம் நன்கு செயற்படுகிறது. அந்நூலுக்கு மட்டும், ஒட்டுமொத்தமாக நீக்கல் செய்து விடலாம். தமிழ்99 தட்டச்சு பலகையை வடிவமைத்தவருள் ஒருவரான பேரா. கிருட்டிணமூர்த்தியுடன் 2016 ஆம் ஆண்டே உரையாடினேன். அதன் படியே, நீக்குதல் வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். விக்கிப்பீடியாவிலும், பிற பல திட்டங்களிலும் நீக்குதலுக்கு அவசரம் காட்ட வேண்டாமென்றே கூறி(பெயர் குறிப்பிடவிரும்பவில்லை.) வருகிறேன். ஏனெனில், தவறுகளே நம் வழிமுறைகளை மாற்றிக் காட்டும் வல்லமை மிக்கவை என்பதே என் எண்ணமாக இருக்கிறது. மற்றொன்று உங்களின் திறம் மேலோங்க, நீங்கள் லினக்சு பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும். AWB பாதையில் பல இடர்கள் உள்ளன. அதுபோன்றதொரு, ஆனால் இணையக்கருவியாக அமைக்க சீனி முற்படுகிறார். PAWS என்பதும் வளர்ந்தே வருகிறது. அதுவும் 1000 மாற்றங்களை செய் என்றால், பலநேரங்களில் பாதிக்கும் குறைவாகத் தான் செயற்படுகிறது. என் அனுபவத்தைப் பொறுத்த வரையில் சீனியின் முயற்சி வெற்றி அடைந்தால், அதனை விக்கி வழங்கியில் இருந்தே சிறப்பாக என்றும் செயற்படும். நான் பகுப்பின் பெயரைக் கொடுத்தால் தானாகவே, சரிபார்த்து, நாம் கூறும் மாற்றங்களைச் செய்யும் வகையில் முயலுகிறேன். இதனை சீனியின் எண்ணங்களுக்குப் பிறகு, நானும் உறுதுணையாக அவருக்கு இருக்க வேண்டும் என்றே முயலுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் (உரை) 09:25, 28 பெப்ரவரி 2018 (UTC)