விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இணைப்பு 2
இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி அவர்களது குடும்பத்தினராகிய ஏழு மனைவிகளும் லெட்சுமி, சந்திரமதி, பூரணம், பர்வதம், முத்தியாலு, லெட்சுமி காமாட்சி ஆகியோரும், அவர்களது குமாரர்களும், மகளும், அண்ணாரது பரம்பரைக் குமாஸ்த்தாக்களும் பணியாட்களுமாகிய சுப்பிரமணிய பிள்ளை மற்றும்முள்ளோரும் அனுப்பும் பணிவான விண்ணப்பம் :
நாங்கள், சேதுபதி மன்னருக்குப் பிரியமானவர்கள். அவரது அரண்மனை அந்தப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் அவரது 14வருட சிறை வாழ்க்கையிலும், அவரைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளோம். திருச்சிராப்பள்ளியில் ஏழு ஆண்டுகளும், எஞ்சிய காலம் சென்னையிலும். அவரது பகைமையுணர்வு காரணமாக கும்பெனியாரால் அவரது பாரம்பரிய இராமநாதபுரம் ஜமீன்தாரியில் இருந்து நீக்கப்பட்டு சிறயில் அடைக்கப்பட்டதால் அவரது சிறைவாழ்க்கையில் பல விதமான சிரமங்களையும், கட்டுப்பாடுகளையும் நாங்களும் பங்கு, கொண்டு வந்தோம். அவருக்கு வழங்கப்பட்ட மாத ஊதியத்தொகையான ரூபாய் ஆயிரத்தையும் எங்களுக்குப் கொடுத்து கொடுத்து வந்தார். அந்தத்தொகை, எங்களது ஜீவியத்திற்குப் போதுமானதாக அமையாததால் வெளியில் கணிசமான தொகைக்கு கடன்பட்டுள்ளோம். தொடர்ந்து மன்னரைக் கவனித்து வந்தோம்.
எங்களது நம்பிக்கையெல்லாம், நாங்கள் வணங்கும் தெய்வம் கருணை புரிந்து எங்கள் மன்னரது பிரச்சனை பற்றி விசாரித்து அவரது குற்றமற்ற தன்மையை முடிவு செய்து அவருக்கு மீண்டும் ஆட்சியுரிமை நல்கப்படும் என்பதும், அதன்வழி எங்களது இன்னல்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதுதான். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்களது மன்னர் நோயுற்றார். நாளுக்கு நாள் மிகுதியான நோயினால் உணவுமீது வெறுப்பு ஏற்பட்டு அவரது உடல் தளர்ந்தது. தாங்கள் கருனை கூர்ந்து மத்துவர் ஒயிட்டை அனுப்பிவைத்து பலவித மருந்துகளைக் கொடுக்குமாறு செய்திர்கள். வெங்கிடாசலம் செட்டியாரது பிணையை ஏற்று மன்னரைக் கோட்டையிலிருந்து வெளியேற அனுமதித்து, மன்னரது உடல் நலம்பேண ஜியாஜ் டவுனிற்கு செல்ல அனுமதி வழங்கினீர்கள். என்றாலும், தவறான சில ஆலோசனையினால் அவரது இறுதி வந்து எய்தியது. இறைவனது ஆணைக்கு யார் மாற்றம் செய்யமுடியும்?
தாங்கள் வழங்கிய அறிவுரை காரணமாக வெங்கிடாசலம் செட்டி, மன்னரது இழப்பிற்கு முன்னும் பின்னும் சில சடங்குகளை மிகவும் விரிவாகவும் ஆடம்பரமாகவும் நிறைவேற்றினார். எங்களது மன்னர் இராமநாதபுரத்தில் இறந்து இருந்தால் எவ்விதம் நடைபெற்று இருக்குமோ அந்த அளவில், அந்தச் செட்டியார் மன்னரது சடலத்தை மிகச்சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்து சென்னை நகர வீதிகளில் பவனி வருமாறு செய்தார். மிகுந்த மரியாதையுடன், எராளமான மக்கள் ஊர்வலமாக சுடுகாடு வரை சென்றனர். இவ்விதம் அவரது அந்திமச் சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன. அடுத்தநாள் அஸ்திமீது பால் தெளிக்கும் சடங்கும் மிகுந்த செலவில் வைதீக ஆசாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அடுத்து மன்னரது இழப்பினால் மிக்க வேதனையுற்றவர்களாக தங்களையும் தங்களது அரசாங்கத்தையும் அனைத்து சென்னை நகர மக்களும் எதிர் நோக்கி உள்ளனர். ஏனென்றால், தாங்கள் இந்த நாட்டு பழக்க வழக்கங்களையும் நன்கு புரிந்தவர்கள்தானே !
நாங்கள் மேலே குறிப்பிட்ட வெங்கடாசலம் செட்டி அவர் களுக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இருந்து வருகிறோம். அவரிடத்தில் மன்னரது அஸ்தியைக் கொண்ட சம்புடம் இருந்து வருகிறது. ஆதலால், நாங்கள் தங்களை வேண்டிக்கொள்வது.
1) அந்த அஸ்திக் கலசத்தை, சிப்பாய்களது பாதுகாப்பில் இராமநாதபுரத்திற்கு அனுப்பிவைத்து, மேலும் நிறைவேற்றி வைக்க வேண்டிய சடங்குகளைச் செய்வதற்காக அதனை எங்களது எஜமானியான ராணி ராஜேஸ்வரி நாச்சியாரிடம் ஒப்படைக்குமாறு செய்யவேண்டியது.
2) மேலும், எங்களது எஜமானியின் பொறுப்பில் எங்களது ஜீவிய காலம் வரை, பராமரிப்பதற்காக எங்களுக்கு மாத உபகாரச் சம்பளம் நிகுதிசெய்து வழங்க வேண்டும். மற்றும், 3) நாங்கள் எங்களது எஜமானியிடம் போய்ச் சேருவதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து பயணப்படியும் வழங்குமாறும், கோட்டை அறையில் உள்ள எங்களது மன்னரது சாமான்களை எங்களுடன் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
4) எங்களது மன்னரது நினைவாக இரு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படல் வேண்டும். ஒன்று இராமநாதபுரத்தில், மன்னர்களது மரபினைப் பின்பற்றி இந்த மன்னரது முன்னோர்களது சமாதிகளின் அருகில், இவரது அஸ்தியும் புதைக்கப்படும் இடத்திலும், இன்னொன்று இந்த சென்னையில் மன்னரது சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்திலும்.
5) இறுதியாக, இந்த சடங்குகளுக்கான செலவு தொகையையும், கட்டுமானத் தொகையையும் உடனடியாக ஒதுக்கீடு செய்து வழங்கப்படல் வேண்டும்.
5) மேலும், இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. இறந்த மன்னரது வாழ்நாளில் வழங்கப்பட்ட பராமரிப்புத் தொகை அவரதுபட்டமகிஷி ராஜராஜேஸ்வரி நாச்சியாருக்கும் அவரது மகள் சிவகாமி நாச்சியாருக்கும், இராமநாதபுரம் அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும், தொடர்ந்து வழங்கப்படும் தொகை ராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு அனுமதிக்கப்படும் வருட பராமரிப்புத் தொகையிலிருந்து கொடுக்கப்படுகிறது. இராமநாதபுரம் மன்னர் மரபினரது பாரம்பரிய வம்சாவளியையும் வரலாற்றையும் ஆய்வுசெய்தால் இராமநாதபுரம் ஜமீன்தாரியின் உரிமை எந்தவகையிலும் ராணி மங்களேசுவரி நாச்சியாருக்கு பொருத்த மற்றது என்பதும் புரியும்.
எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி எங்களது எஜமானி, மன்னரது மறைவைத் தாங்க இயலாத நிலையில் தீக்குளிப்பதற்கு முடிவு செய்தார் என்றும், அவரை கர்னல் மர்ட்டினல் மிகவும் ஆறுதல் சொல்லி தடுத்துவிட்டார் என அறிகிறோம். மேலும் மன்னரது அஸ்தி இராமநாதபுரம் வரப்பெற்றவுடன் அதனைக் கைப்பற்றி, அவரே உரிய சடங்குளைச் செய்ய இருப்பதாக இருக்கிறோம். ஆனால், இத்தகைய செயல் எங்களது சமய ஆசாரங்களுக்கு முரணானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விண்ணப்பத்திலும், இத்துடன் கவர்னருக்கு அனுப்பப்படும் மனுக்களிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கனம் பொருந்திய பிரபு அவர்கள் ஆய்வு செய்து, பொருத்தமான முறையில் தலையிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு தக்க பரிகாரம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(ஒப்பம்) | 1) | கோவிந்த சாமிநாத | லட்சுமி அம்மாள் |
2) | - | கோமதி அம்மாள் | |
3) | - | பூரணம் | |
4) | _ | பர்வதம் | |
5) | - | முத்தாதி | |
6) | - | (தெலுங்கில்) | |
7) | _ | காமாட்சி | |
8) | ரணா சிங்கத்தேவர் | ||
9) | கோவிந்த சாமிநாத குப்புத்தேவர் | ||
10) | சின்னச்சாமி | 11) | மட்டுவார் குழலி நாச்சியார் |
12) | மலைவளர்காதலி நாச்சியார் | 13) | சிதம்பரம் |
14) | வீரபத்திரன் | 15) | முத்துவீறு |
16) | நாகலிங்கம் | 17) | லெட்சுமணன் |
18) | முத்துவயிறு | 19) | |
20) | அர்ச்சுனன் | 21) | ராமசாமி |
22) | ஆதிஐயன் | 23) | ஈசுவர ஐயன் |
24) | ஆணிமுத்து | 25) | முத்து |
26) | முத்துப்பையன் | 27) | குப்பராசா |
28) | மல்லாபன் | 29) | முத்துக்கருப்பன் |
30) | வீரன்செட்டி | 31) | போடிகான் |
32) | சின்னமுத்து | 33) | முத்து நாராயணன் |
34) | வீரபத்திரன் | 35) | பெருமாள் |
36) | தோரான் | 37) | இராமன் |
38) | வேலாயுதம் | 39) | சங்கிலி |
40) | குழந்தைவேலு | 41) | வெள்ளையன் |
42) | நாகலிங்கம் | 43) | அருணாச்சலம்செட்டி |
44) | சித்திரன் | 45) | சிலைமான் |
46) | சிலைமான் | 47) | கறுப்பன் |
48) | முத்துக்கறுப்பன் | 49) | சங்கரநாராயணன் |
50) | அகமதுகான் | 51) | காதர்சாயபு |
52) | தலைப்பாக்கட்டிகாதர் | 53) | |
54) | சவுந்தரநாதன் | 55) | மகம்மது |
56) | 57) | அருணாச்சலம் | |
58) | அளகப்பன் | 59) | முத்துக்கிருஷ்ணன் |
60) | கறுப்பணன் | 61) | வீரப்பெருமாள் |
62) | 63) | மாரியாயி | |
64) | அகிலாண்டம் | 65) | கமலாயி |
66) | மோகனா | 67) | தனுசு |
68) | கங்கராயி | 69) | உலகாயி |
70) | அங்காளம்மை | 71) | சிலம்பாயி |
72) | முத்துவடுகு | 73) | பேச்சி |
74) | சுந்தரம் | 75) | லட்சுமியம்மாள் |
76) | காத்தாயி | 77) | மங்கத்தாயி |
78) | சின்னக்குட்டி | 79) | லட்சுமி |
80) | முத்தம்மா | 81) | தாச்சி |
82) | கமலாயி | 83) | மங்கம்மா |
84) | முத்துமணிபண்டாரம் | 85) | இராமசாமி நாயக்கர் |
86) | லட்சுமணன் | 87) | கீதை |
88) | சதாசிவன் | 89) | வண்ணான் காத்தவராயன் |
90) | அம்பட்டராக்கன் | 91) | வெங்கடேசன் |
92) | சுப்பன் -- | இன்னும் எழுபேர் | |
- ↑ Tamilnadu Archives, Madras - Revenue Consultations. Vol. 167 pp. 312-320