சேச யோகியார் ஞான ஏற்றம்
Appearance
வரிசை எண் 13
சேஷ யோகியார்
ஞான ஏற்றம்
(ஏற்றப் பாட்டு)
நூல் பக்கம் 275
ஞான ஏற்றம்
[தொகு]1-10
[தொகு]- பிள்ளையாரும் வாரி
- பிள்ளையாரும் அங்கே
- பெருத்த மூலாதாரம்
- சிறுத்த இதழ் நாலாம்
- உரைத்த கம்பம் ஆகி – 5
- ஓங்கி உச்சி தொட்டுத்
- தாங்கியதன் கீழாய்த்
- தான் இரண்டதாகித்
- தங்கி வாயு ஆனால்
- அங்குமே கடந்து - 10
11-20
[தொகு]- சங்கிலி பிளந்து
- சமத்த வாயு ஆனால்
- இங்கிது உரைத்தே
- இரண்டுடனே வாரி
- இன்னம் அதன் மேலே – 15
- வன்னம் அதைச் சொல்வேன்
- அன்னத்துக்கு ராசன்
- அயன் சரஸ்வதி யாம்
- நயந்த இதழ் ஆறாம்
- நல்ல நிலம் பொன்னாம் – 20
21-30
[தொகு]- நகரமே எழுத்தாம்
- உகரம் கந்தமாகும்
- முத்தி தந்த நாதா
- மூன்றுடனே வாரி
- மோசம் பண்ண மாயன் – 25
- வாசமணி பூரம்
- நேசம் லட்சுமியாம்
- வீசம்பத் திகழும்
- ஓசை மவ்வெழுத்தாம்
- தேசமே வெளுப்பாம் - 30
31-40
[தொகு]- ஆறு சுவை யாலே
- நடுவே தேயு வீடாம்
- நாலுடனே வாரி
- நாலும் எட்டிதழும்
- நல்ல செம்பு மேனி – 35
- எல்லை ருத்திரனாம்
- தொல்லை விழிப் பார்வை
- செல்லுமே சிகாரம்
- அல்லல் உண்டே இன்னம்
- அஞ்சுடனே வாரி – 40
41-50
[தொகு]- நெஞ்சில் அவ்வெழுத்தாம்
- கொஞ்சிய மகேசன்
- மிஞ்சுமறு கோணம்
- மேனி கருப்பாமே
- தன்னிதழைப் பார்க்கில் - 45
- தனியே பதினாறாம்
- முந்த வேலை ஓடல்
- அந்தரங்கம் சொல்வேன்
- ஆறுடனே வாரி
- கூறுவேனே நானும் – 50
51-60
[தொகு]- குருவிருந்த நேர்மை
- அருகிருந்த பூசம்
- அமைச்சல்லவோ அத்தான்
- என்னவென்று சொல்வேன்
- ஏழுடனே வாரி – 55
- தாழச் சொன்ன பேச்சுச்
- சத்தியங்காண் அத்தான்
- ஏ.ழை சொன்ன பேச்சு
- எட்டுடனே வாரி
- எட்டுச்சாண் உடம்பு – 60
61-70
[தொகு]- கட்டையை நம்பாதே
- ஒன்றல்லவோ தெய்வம்
- ஒருபதியாம் எட்டாம்
- ஊமை எழுத்தாலே
- ஓங்காரம் உண்டாச்சு – 65
- ஓங்காரத்தினாலே
- உண்டாச்சுதே லோகம்
- இதுவும் குருவாலே
- இருபதியா எட்டாம்
- இறைக்கிறாண் ஏற்றம் – 70
71-80
[தொகு]- சுரக்கு ஏழை நாலாம்
- முந்தி குரு பாதம்
- முப்பத்தியா எட்டாம்
- முப்பாழும் கடந்து
- அப்பாலே நடந்தால் – 75
- அதிசயம் பார் அத்தான்
- நல்ல குரு பாதம்
- நாற்பதியா எட்டாம்
- நாலு மூலைக் குண்டம்
- நடுவெழுந்த தூணாம் – 80
81-90
[தொகு]- படுமுதல் இரண்டாம்
- படுமுதல் பிடுங்கி
- பருத்த மரம் ஏறிக்
- குருத்தில் கள் இறக்கிக்
- கூசாமல் குடித்தாற் – 85
- பேசாதே பிறகு
- அஞ்சாதே நீ அத்தான்
- ஐம்பதியா எட்டாம்
- அஞ்சல்லவோ பூதம்
- பஞ்சல்லோ எழுத்து – 90
91-100
[தொகு]- அஞ்சொடுங்கும் போது
- நெஞ்சடங்கும் அத்தான்
- ஆறுமுகம் அல்லோ
- அறுபதியா எட்டாம்
- ஆறல்லவோ தாரம் – 95
- வேறல்லோ சொரூபம்
- வேறறிந்த பேர்க்குத்
- தூரமில்லை அத்தான்
- என்னவென்று சொல்வேன்
- எழுபதியா எட்டாம் – 100
101-120
[தொகு]- ஏழல்லவோ நாடி
- வாழின் பத்து நாடி
- பாழல்லோ நானும்
- பாழ்கடந்த பேர்க்கும்
- பத்துக் கோடி தெண்டம் – 105
- என்னவென்று சொல்வேன்
- எண்பதியா எட்டாம்
- எண்ணிக்கை அறிந்து
- கண்ணப்பனைக் கண்டு
- திண்ணப்பா பழத்தை – 110
111-120
[தொகு]- குண்ணப்பா வறுமை
- விண்ணப்பம் உரைத்துச்
- சண்ணப்பா குருவே
- சொன்னது அபசாரம்
- தொண்ணூறுடன் எட்டாம் – 115
- மண்ணால் வெகு தூரம்
- குண்ணறிந்த பேரை
- எண்ணறிந்தே வாடி
- ஏக மனமாகிப்
- பாரமும் அறிந்து – 120
121-130
[தொகு]- நாகத்தை எழுப்பிப்
- பீசத்தைத் துறந்து
- யோகத்தை நடத்திப்
- போகத்தைக் கடந்தால்
- தாகத்தை நிறுத்தும் – 125
- சோதி அறிந்தோர்க்குத்
- தூரமில்லை அத்தான்
- சாதிகுலம் இல்லை
- சற்குரு அறிந்தால்
- நித்தியம் இதுவே – 130
131-139
[தொகு]- பத்தியாப் பணிந்தால்
- முத்தி தரும் அத்தான்
- வாமநெறி சீவன்
- ராமயோகி தந்த
- ராசயோகி சேடன் – 135
- தாசன் அருளாலே
- பாசமறச் சொன்னேன்
- பிரியாமலே அத்தான்
- பிள்ளையாரும் வாரி – 139
ஞான ஏற்றம் முற்றும்