வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பு–2
சுதேசி ஸ்டீம் நாவிகேஷன்
கம்பெனி (லிமிட்டெட்), தூத்துக்குடி

1 இந்தக் கம்பெனியானது 1882-ம் ௵த்து “இந்தியன் கம்பெனி ஆக்டு” படி 1906-ம்௵ அக்டோபர் ௴ 16௳யில் ரிஜிஸ்டர் செய்யப்பெற்றது.

2 இந்தக் கம்பெனிக்கு மூலதனம் ரூ. 10,00,000, இம்மூலதனம் பங்கு, 1க்கு ரூ. 25-0-0 வீதம் 40,000 பங்குகளாக இந்தியா, இலங்கை முதலிய ஆசியாக் கண்டத்துத் தேசத்தார்களிடமிருந்து சேர்க்கப்படும். மூலதனம் வேண்டும்போது அதிகரிக்கப்படும். பங்காளிகள் அவரவர்கள் பங்குத் தொகை மட்டில் உத்திரவாதிகள்.

3 இக்கம்பெனியின் உத்தியோகஸ்தர்கள்:-

அக்கிராசனர்

ஸ்ரீமான். பொ, பாண்டித்துரைச்சாமித் தேவர் அவர்கள், பாலவநத்தம் ஜமீன்தார், இராமநாதபுரம், மதுரை.

டயரெக்டர்கள்

1 மகா-௱-௱ ஸ்ரீ பி. வெங்கட்டராமாநுஜலு நாயுடுகாரு, பேங்கர், தூத்துக்குடி

2 மகா-௱-௱ ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரவர்கள் பி.ஏ., வக்கீல், சேலம்

3 மகா-௱-௱ ஸ்ரீ ஏ. சுந்தர சாஸ்திரியாரவர்கள், பி.ஏ. பி.யல்., திருநெல்வேலி பாலம்

4 மகா-௱-௱ ஸ்ரீ என்.ஏ.வி. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், பி.ஏ.பி.எல்., வண்ணார்பேட்டை, திருநெல்வேலி பாலம்

5 மகா-௱-௱ ஸ்ரீ எம். K.R. தேவதாஸ் பிள்ளையவர்கள், பி.ஏ. பி.எல்., பாளையங்கோட்டை

6 மகா-௱-௱ ஸ்ரீ டி. எஸ். சுப்பிரமணிய பிள்ளையவர்கள், சேயர்மேன், சிவ தேவஸ்தானம் கமிட்டி, திருநெல்வேலி

7 மகா-௱-௱-ஸ்ரீ சி. சு. வ. கிருஷ்ண பிள்ளையவர்கள்.வியாபாரம், தூத்துக்குடி
8  ,, அ.மு.ம. அருணாசலம் பிள்ளையவர்கள்,வியாபாரம், தூத்துக்குடி
9  ,, அண்ணாசாமி ஐயரவர்கள், பிளீடர், தூத்துக்குடி
10  ,, சி. த. ஆ. ஆறுமுகம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி
11  ,, அ.சு.வே. வேலாயுதம் பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி
12  ,, வ. அ. ஆ. ஆதிநா றாயணஞ் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி
13  ,, வ.அ.வெ.சு. வெங்கிடாசலஞ் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி
14  ,, சு. தெய்வநாயகம் பிள்ளையவர்கள்,வியாபாரம், தூத்துக்குடி
15  ,, ஏ.சி.வ, திருச்சிற்றம்பலம் செட்டியாரவர்கள், வியாபாரம், தூத்துக்குடி
16  ,, ஏ.வி.ஆர்.ஏ. அடைக்கப்பச் செட்டியாரவர்கள், வியாபாரம், கொழும்பு
17  ,, ஏ.எம், சைய்யத் இப்ராகிம் அவர்கள், வியாபாரம், கொழும்பு
18  ,, A. சோலைமலைத் தேவரவர்கள், வியாபாரம், வைத்தீஸ்வரன்கோயில்
19  ,, திரு.. நாராயண பிள்ளையவர்கள்,கைவிழாஞ்சேரி, சீர்காழி
20  ,, K. சிதம்பரநாத முதலியாரவர்கள்,கைலிழாஞ்சேரி, சீர்காழி
21  ,, M. T. K. முத்துசாமி செட்டியாரவர்கள், சீர்காழி
22  ,, டி.எஸ். குப்புசாமி பிள்ளையவர்கள், தாடாளன்கோவில், சீர்காழி
23  ,, D. அனுமந்த செட்டியாரவர்கள்,சோமவார்பேட்டை, குடகு
24  ,, எஸ். இராமசாமி பிள்ளையவர்கள்,கன்னப்பாடி (ரூவன்வாலா)
25 மகா-௱-௱-ஸ்ரீ A. அசனுசைன் இராவுத்தரவர்கள், திண்டுக்கல்

26 ,, சீனி அசனுசை இராவுத்தரவர்கள், இராமாதபுரம்

27 ,, A. சோமசுந்தரம் அவர்கள், எம். ஏ., கூடலூர்

28 ,, W. ஸ்ரீநிவாச அய்யங்காரவர்கள், சென்னபட்டனம்

29 ,, அண்ணான் திருமலை அய்யரவர்கள், சேலம்

30 ,, பிட்டா இராமசாமி அய்யரவர்கள், சேலம்

31 ,, A. அருணாசலம் செட்டியாரவர்கள், சேலம்

 செக்ரெட்டேரிகள்

,, எஸ். டீ, கிருஷ்ண அய்யங்காரவர்கள் பி, ஏ. பி. எல்., தூத்துக்குடி, கெளரவகாரியதரிசி

,, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளையவர்கள் தூத்துக்குடி, துணைக்காரியதரிசி,

ஆடிட்டர்கள்

,,பி. கே. இராமய்யரவர்கள், பி.ஏ.பி.யல். கெளரவ ஆடிட்டர், திருநெல்வேலி பாலம்.

4 கம்பேனியின் ரிஜிஸ்டரான ஆபீஸ் தற்காலம் தூத்துக்குடி பீச்சு ரோடு 4-ம் நிர் கட்டிடத்தில் அமைக்கப்பெற்றுள்ளது.

5  இக்கம்பேனி ஏற்படுத்தியதின் முக்கிய நோக்கங்கள்:-

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் சுதேசிய ஸ்டீமர்கள் நடைபெறாத துறைமுகங்கட்கும் பிராயாணத்தையும் வியாபாரத்தையும் சௌகரியப்படுத்தவும் சகாயப்படுத்தவும் தக்க ஸ்டீமர்கள் நடைபெறும்படி செய்தல், இந்தியர்களையும் இலங்கையர்களையும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களையும் கப்பல் நடாத்தும் தொழிலில் பழக்குவித்து அதன் மூலம் வரும் லாபத்தையடையும்படி செய்தல், இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களுக்கும் கப்பல் நடாத்துந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையுஞ் செய்து காட்டிக் கற்பித்தல், இந்திய இலங்கை மாணவர்க்கும் மற்றும் ஆசியாக் கண்டத்து மாணவர்க்கும் கப்பலோட்டுந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையும் சாஸ்திர சம்பந்தமாகக் கற்பிக்கும் கலாசாலைகள் ஏற்படுத்தல், கப்பல் நடாத்துத் தொழிலிலும் வியாபார முறையிலும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலிய ஆசியா கண்டவாசிகளுக்குள் ஐக்கிய பாவனையையுண்டுபண்ணி ஒற்றுமையாக உழைக்கச் செய்தல், பற்பல வியாபார ஸ்தலங்களிலுள்ள வியாபாரங்கட்கடுத்த கொள்வன கொடுப்பன தெரிந்து கொள்வதற்காக இந்தியா இலங்கை முதலிய ஆசியா கண்ட தேசத்தவர்கள் ஏஜெண்டுகளாக நியமித்தல், ஸ்டீமர்கள், ஸ்டீம் லாஞ்சுகள், படகுகள் முதலியன நிர்மாணஞ் செய்வதற்கும் அவைகளைச் செப்பனிடுவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும், துறைகளேற்படுத்தல்; கம்பெனியார் தீர்மானிக்கும் சுதேசியக் கைத் தொழில்களையும் வியாபாரங்களையும் நடத்துதல் முதலியனவாம்.

6 தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் இந்திய துறைமுகங்கட்கும் பிரயாணமும் வியாபாரமும் அபிவிருத்தியான நிலைமையிலிருப்பதால் கம்பெனியின் செலவும் ரிசர்வ் பண்டுக்கு வைத்துக்கொள்ளும் தொகையும் நீக்கி பெரியதோர் ஈவு கிடைக்குமாறு கணக்கிடப்பட்டிருக்கிறது.
7 100 பங்கு எடுக்கிற பங்காளிகள் டயரெக்டர்களாவதற்கு பாத்தியதையுடையவர்கள்; ஆனால் டயரெக்டர்கள் வருஷத்துக்கொரு தடவை பங்காளிகளின் ஆர்டினோம் மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.
8 எடுக்கப்படும் பங்குகளின் மொத்தத் தொகையில் ஐந்திலொரு பங்குத்தொகை முன்பணமாகச் செலுத்தப்பட வேண்டும். பாக்கிப் பங்குத் தொகை கம்பேனியார் வேண்டுங் காலங்களில் செலுத்தப்பட வேண்டும்.
9 கம்பேனியின் நன்மைக்காகவும், லாபத்துக்காகவும் பங்காளிகள், கம்பேனியின் ஸ்டீமர்களிலேயே பிரயாணமும், ஏற்றுமதி, இறக்குமதியும் செய்யவேண்டும்.
10 கம்பேனியின் பங்குகளை மற்ற சொத்துக்களைப் போல் அடமானம் கிரயஞ் செய்யலாம்; ஆனால் பணம் ஒரு பங்காளிக்கும் கம்பேனியிலிருந்து வாபஸ் கொடுக்கப்படமாட்டாது.

11 கம்பேனிக்குக் கிடைக்கும் லாபத்தொகையில் கம்பேனிக்கு ரிசர்வ் பண்டாக வைத்துக் கொண்டது போக மீதத் தொகையைப் பங்காளிகளுக்கு அவர்கள் பங்கு வீதாசாரப்படி பகுந்து கொடுக்கப்படும்.

12 கம்பேனியின் விதிகளடங்கிய புத்தகமும், மிமோரண்டமும் அப்ளிக்கேஷன் பாரங்களும் தூத்துக்குடி கம்பேனி ஆபீசிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விதிகளடங்கிய புத்தகம் மிமோரண்டம் இவைகளின் கிரயம் ரூ 0–8–0.

13 சகல கரஸ்பாண்டன்ஸ்களும், அப்ளிக்கேஷன்களும் மனியாடர்களும் தூத்துக்குடியிலிருக்கும் கம்பேனியில் செக்ரட்டேரி அல்லது அசிஸ்டெண்டு செக்ரட்டேரியர்களுக்கு அனுப்பவேண்டும்.

14 சுமார் 25,000 பங்குகள் வரை இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்னும் அப்ளிக்கேஷன் விரைவாக வந்துகொண்டேயிருக்கின்றன. தேசாபிமானமுள்ள இந்தியா, இலங்கை முதலிய ஆசியா கண்டத்துத் தேச கனவான்கள் கம்பேனியில் அதிகப் பங்குகள் எடுத்துதவிபுரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

தூத்துக்குடி,

எஸ். டி. கிருஷ்ணய்யங்கார்,

24-9-07.

கெளரவ காரியதரிசி