பக்கம்:இராவண காவியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 27, பண்பொடு நானிலம் பரந்து வாழ்வுறும் நண்பருஞ் சுற்றமு நயந்த மற்றரும் கண்பெறுங் காட்சியைக் காண வேண்டியே வீண்பொரு மாடநீ ளிலங்கை மேயினர். அணிநகர் மக்களிவ் வாறி ருக்கவே மணிநெடுந் தேர்வரிசை மயிலொ டேறியே குணிகுண மாயொளிர் கோயில் வாயில்வீட் டிணையிலா னகன்றெரு விடத்து மேயினான் . 29. மாறுகொ டும்டரை மறைப்பு வெண்குடை வீறுகொ டவற்றுயர் 'மேவ வொண்கொடி ஏறெனப் பல்லிய மிசைப்ப வண்ணலும் ஆறென வகன்றெரு வதனிற் சென்றனன், 30. புதிய நீராற்றிடைப் போகும் தோணியில் மதியொடு செங்கதிர் மருவிச் செல்லல்போல் பொதியவிழ் பூந்தொடைப் பொன் னன் னாளொடு சிதைவிலா வழக னுந் தேரிற் சென்றனன். 31. வடிமணித் தேர்வுசை வயங்கித் தோன்றிடும் கடிகமழ் கா னிலக் கவினப் பூப்புனை தொடையணி யழச் னை க் துதைந்த லர்ந்தபூங் கொடி.யுட னிருவிழி குளிரக் கண்டனர். 32. கனியொடும் வெளியதேங் காய்ப ழத்தொடும் நனியொளி விளக்கொடும் நறும், கையொடும் இனியவெற் றிலையொடு மோதிக் கூந்தலார் மனை தொறும் மனை தொறும் வழிபட் டாரரோ. 33. ஆடவ ரோவிலை பரிவை மார்களும் கூடுறு சிறியருங் குழல்வெ ளுத்தரும் மாடி. தொ றிருந்தவர் மலர்க்கை தூக்கியே கூடைகூ டையாய்மலர் கொட்டி வாழ்த்தினர். 29. குணி- பொருள். குணம்-பண்பு; பொருளெலாம பண்புடன் விளங்கும். 31, கவின. அழகிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/179&oldid=987694" இலிருந்து மீள்விக்கப்பட்டது