பக்கம்:இராவண காவியம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அருாெழுகு கண்ணு மவிர்மதியொவ் வாமுகமும் தருமலர்நீள் கையும் தமிழ்பயிலுஞ் செவ்வாயும் மருவளருஞ் செந்தா மரைபுரைசெம் மேனியுமின் றிருள்படிந்து செஞ்சேற் றிடைபுரண்டு வாழ்கினவே. 33. கேள்வாய்ச்சொற் றட்டாக் கெழுதகையே யப்பாவுன் ஆள்வீச்சைப் பேச்சை யரும்பகழி வேல்வீச்சை வாள்வீச்சைக் கண்டு மகிழாம லாரியருன் நாள்வீச்சைக் கண்டு நலனழியச் செய்தாரே. (பிள்ளைப்பருவம் பத்து) 34. ஆழ்கடலி னாவதெலா (மாய்ந்த தமிழ்ப்பெரியார் வீழ்க பகைப்பிணிமேல் மேல்வளர்க வன்புநலம் சூழ்க திருவுளத்துச் சூழ்ந்தனவெல் லாஞ்சேயோன் வாழ்க வெனமுன்னாள் வாழ்த்திய சொற் பொய்த்ததுவோ! 35. மங்கா மதிபோல் மலர்முகத்தை யண்ணாந்து - முங்கா விதழ்விரித்து மொய்விழிமிப் பல்காட்டித் தங்கா வுவப்போங்கச் சதங்கைக்கால் கைகாட்டிச் செங்கீரை யாடிச் சிரிக்கயான் காண்பேனோ! 36. பெருங்கண்ணா ரீப்போற் பெயராது சூழ்நிற்பக் கருங்கை மறவர் களத்துப் பகைகொண்டார் முருங்கவடித் தோட்டிடுநின் முன்னோர் புகழ்பாடி. அருங்கண் வளர்தெனத்தா லாட்டி மகிழ்வேனோ ! 37. நெஞ்சி இவப்போங்க நீள்கவலை யாழ்ந்தொழிய வஞ்சியென் கண்கள் மலர மலர்க்கையால் அஞ்சு விரலு மணிகொள்ள வேகுறிப்பாற் கொஞ்சிநீ சப்பாணி கொட்ட. நான் காண்பேனோ! 97, நாள்வீச்சு-சாவு, முடிவு. 35, முங்குதல். அமிழ்தல். செங்கீரை-இளஞ்சொ ல். 36. பெருங்கண்ணார்-தோழியர். முருங்க-அழிய். 37. சப்பாணி-கைதட்டுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/477&oldid=988000" இலிருந்து மீள்விக்கப்பட்டது