உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேன்மொழிவரலாறு. கம்பர் காலத்து இருந்தா ரெனக் கூறும் துணி வொன்றே இதற்குப் போதிய சான்றாம். எங்ஙனம் கொள்ளினும் திருவள்ளுவர் சகோதரியாராகிய ஒளவையார் கடைச் சங்க காலத்தில் விளங்கினவர் என்பது கபில பரணர்க து பாடல்களால் நன்கு நிச்சயிக்கப்படும். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி. ஞானக்குறள், அசதிக்கோவை , முதலிய திவ்விய அறநூல்களும் இவர் செய்தனவேயாம்.. இவரைப்பற்றிய சிறுகதைகள் அனேகமுள. ஒளவையா ரென்னும் பெயர் இவர்க்கு இயற்பெயரன்றிக் காரணத் தாலிடப்பட்டதன்று. பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ் வாரும் "ஒளவைபாடலுக்கு நறுநெய்பால்" என்னுஞ் செய்யுளிலே இவருடைய வாக்குப் பலித்ததை வியந்து போயினர். இவருடைய வாக்குகள் சாபா நுக்கிரகமுடை யனவாயிருந்தமை பற்றி பே இவர் தமிழ் நாடெங்கும். வியாபித்த புகழும். நன்கு மதிப்புமுடையராயினர். ஆயி ரத்தெண்ணூறு வருடங் கடந்தும். இன்றும் ஒளவையா ரென்றால் சிறுவரும் பெருமதிப்புக் காட்டுவர். பண்டைக் காலத்துப் புலவர்களுள்ளே இவர் ஒருவர் பெயரே கல்வி யறிவில்லாத சாமானியர் வாயிலுங் கேட்கப்படுவதா யிற்று . இங்கனம் நடைபெற்று வந்த கடைச்சங்கம், உக்கி ரப் பெருவழுதியென்னும் பாண்டியன் இறத்தலோடும் நிலை தளர்ந் தொடுங்கிற்று. அச்சங்கத்திலே சமணர்கள் ளும் சைவர்களும் வைஷ்ணவர்களுமிருந்து விளங்கின ரெ ன்பது அக்காலத்து நூல்களாலினிது விளங்கும். பல சம யிகள் மாத்திரமன்று நான்கு வருணத்தாருமே சங்கப் புலவர்களாய் விளங்கினரென்பதும் நன்கு புலப்படுகின் றது. கடைச்சங்கமொழிந்த பிற்றை ஞான்றும், சிலகா லமாகப் பாண்டியர்கள் தமிழை அபிமானித்துப் புலவர் களுக்குப் பரிசில் கொடுத்து வந்தார்கள். அதன் பின்னர்