பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. 105 மலை விடாகத் - தருமிசைக் கொண்ட - சிறியிலை நெல்லித்தீன் கனிகுறியா- தாதனின்னகத்தடக்கிச் சாதனங்கவெமக்கர் தனையே" எனப் புறநானூற்றில் வரும் ஒளவையார் பாட லால் இவ்வுண்மை புலப்படும். இது ஒளவையார் பாடிய தென்பது "அமிழ்து விளைதிங்கனியெளவைக்கீந்த - வுரவுச் சினங்கனலு மொளிதிகழ் நெடுவே - தரவக்கடற்றானை யதி கன்" எனச் சிறுபாணாற்றுப்படையில் வருவதால் பெறப் படும். அவ்வதிகன் மாட்டுத் தாங்கொண்ட பேரன்பினால் அவனுடைய தூதாகத் தொண்டைமானிடஞ் சென்றவர். தொண்டைமான் தனது வலியையுணர்த்தும் பொருட்டுத் தன் ஆயுதசாலையைத் திறந்து காட்ட, "இவ்வாயுதங்க ளெல்லாம் நெய் விட்டு மாலை சாத்திப் பூசிக்கப்படுவனவா ய்க் கதிர்கான்று விளங்குகின்றன. அதிகனுடைய ஆயு தங்களோ பகைவரைக் குத்தித் தினந்தோறும் பிடியும் நுதியும் சிதைந்து கொல்லனுடைய கம்மியசாலையின் கண் ணவாம். என்னும் கருத்துற்ற பாடலைக் கூறித் தொண் டைமானைத் தலைகுனிவித்த மதிநுட்பமுடையவர். இவர் உக்கிரப் பெருவழுதி காலமுதல் கம்பர் காலம் வரையும் சீவித்தவரெனப்படுதலால் அவர்க்கு வயசு 61ண்ணூற் றின் மேற்பட்டதாதல் வேண்டும். கருநெல்லிக்கனியுண்டு காயசித்தி செய்துகொண்டமையே இவ்வா யுள் நீட்டத் துக்கேதுவாம். திருமூலர் தினமொன்றுக்கு இயல்பாகவெழுகின்ற 21, 600 சுவாசங்களையும் 730 ஆகவடக்கி மூவாயிரம்வரு ஷமுயிரோடிருந்தாரன்றோ . இவ்விஷயம் யோக சாஸ்தி ரம் வல்லார்க்கன்றி மற்றோர்க்கு எளிதிலுண்மையாகமா ட்டாது. அது வுமன்றி மாந்தர்க்கு வயது நூறல்லதில்லை யென்று வரையறுக்குந் தமிழ்ப்புலவர்கள் தாமே சிறிதுங் கூசாது ஏதுவுங்கூ றிச் சங்ககாலத்திருந்த ஒளவையார்