பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: 9: 5. 104 தென்மொழி வரலாறு. யராய் விளங்கிய மாது சிரோமணியார். பகவனாரும் ஆதி யும் தம்முட் செய்துகொண்ட சங்கேதப்படி, பிறக்கும் பிள்ளைகளை யெல்லாம் அஃதது பிறக்குமிடத்திலே வைத் துவிட்டுச் செல்வாராயினர். ஒளவையைப் பெற்றவுடனும் தாய், "இச்சிசுவை யெவ்வாறு விடுத்துப் போவேன்" என்றிரங்கி நின்றாள். அப்பொழுது ஒளவையாராகிய அச்சிசு தாய்முகத்தை நோக்கி, "எவ்வுயிருங் காப்பதற் கோ ரீசனுண்டோ இல்லையோ - அவ்வுயிரில் யானுமொன் றிங் கல்லேனோ - வவ்வி - அருகுவது கொண்டிங் கலைவா னே னன்னாய் - வருகுவது தானே வரும்” என்னும் பாட லை அற்புதமாகக் கூறத் தாய் அது கேட்டு அவ்விடத்தி னின்றும் நீங்கினாள். ஒளவையாருக்கு அதிகமான் திரு வள்ளுவர், கபிலர் என மூவர் சகோதரரும், உறுவை, உப்பை, வள்ளி யென மூவர் சகோதரிகளுமுளர். ஓள் வையார் தமிழ்ப்புலமையோடு மதிநுட்பமு முடையவர். இல்லறவொழுக்கத்தை விரும்பாது தவத்தையே பார மார்த்திகமாகக் கொண்டொழுகினவர். சிறிது காலம் மது ரையிலும், சில காலம் சோழநாட்டிலும், சிறிது காலம் சேரநாட்டிலும், நெடுங்காலம் அதிகனிடத்திலும், எஞ் சியகாலம் முனிவர் வாசங்களிலும் வசித்தவர். அரசரை யும் பிரபுக்களையும் பாடி அவர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் காலங்கழித்தவர். இவராற் பாடப்பட்டோர் அதிகன், சேரமான் வெண்கோ, தொண்டைமான், நாஞ் சில் வள்ளுவன், உக்கிரப்பெருவழுதி, இராசசூயம் வே ட்டபெருநற் கிள்ளி முதலியோர். தமது தேகமெலிவைக் கண்டிரங்கி அதிகன் கொடுத்த கருநெல்லிக்கனி யாவர்க்கு மெளிதிற் கிடைப்பதொன் றன்று. உண்டவர்க்குத் திடகா த்திரமும் தீர்க்காயுளுந் தருமியல்பினது. அத்தகைய அற் புத நெல்லிக்கனியைத் தானுண்டுநலம்பெறாது இவர்க்குக் கொடுத்த அதிகன் வண்மையன்றோ வண்மை. "பெரு