பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. 103 அண்டபிண்டங்களின் தத்துவசொரூபத்தை அநுபவப் பிரத்தியட்சமாக வுணர்ந்து உலகத்துக்கு வெளியிட்ட மகா ஞானிகளுள்ளே இவர் தலைமைபெற்றவர். அவரு டைய உபதேசமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் பரி பாஷையுமாகவே யிருக்கும். சித்தின் ரிச்சடமும் சடமின் றிச் சித்தும் இல்லையென்பது அவர் சித்தாந்தமாம். "அணுவுளவனுமவனுள ணுவுங்-கணுவறநின்ற கலப் பஃதுணரார்- இணை யிலியீசனவனெங்குமாகித் - தணி வறநின்ற சராசரந்தானே சீவனுக்கு வடி வுகூ றிய திருமந் திரம் வருமாறு:-"மேவிய சீவன் வடிவது சொல்லிடிற் கோ வின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு-மேவியகூ றது வாயிரமாயினா-லாவியின் கூறு நூ றாயிரத்தொன்றே” பஞ்சேந்திரியங்களையும் அடக்குதல் கூடாதென்பதும், அடக்குங்கால் அறிவில்லாத சடத்தின் கதியாமென்பதும் அவை தாமே யடங்கு முபாயமறிவதே அறிவு என்பதும் அவர் கூறிய, "அஞ்சு மடக்கடக்கென்பரறிவிலா -ரஞ்சு மடக்குமமரமிங்கில்லை-யஞ்சுமடக்கில சேதன மாமென்றிட் டஞ்சுமடக்காவறி வறிந்தேனே" என்னுந் திருமந்திரத்தா னறிக. அவர் கூறும் ஞான பூசை வருமாறு:- "உள்ளம் பெருங்கோயிலூனுடம் பாலயம் - வள்ளற்பிரானார்க்கு வாய் கோபுரவாயில்- தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்- கள்ளப்புலனைந்துங் காளாமணிவிளக்கே. இன்னோரன்ன திவ்வியோபதேசங்கள் திருமந்திரத்தி னுள்ளே அளவிலவாதலின் அவற்றைச் சமுத்திரகலச நியாயமாக வெடுத்துக் காட்டல் எளிதன்றாம். ஒளவையார். சோழியப் பிராமணராகிய பகவனாரென்பவருக்கு ஆதியென்பவள் வயிற்றிலே பிறந்து காவிரிப்பூம்பட்டினத் திலே பாணர் சேரியிலே வளர்ந்து தமிழ்ப்புலமையுடை