பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம். 1 நச்சினார்க்கினியருடைய வசனநடை. அந்நிலை மருங்கின முதலாகிய, மும்முதற்பொருட்கு முரிய வென்ப என்பதனானுணர்க. இக்கருத்தானே வள்ளுவநாயனாரு முப்பாலாகக்கூறி மெய்யுணர்தலானிமித்தங் கூறினார். செந்தமிழ் செவ்விய தமிழ். முந்து நூல், அகத்தியமும் மாபுராணமும் பூதபுரா ணமும் இசை நுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணங்க ளாவன. எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன வியலும் சோதிடமுங் காந் தருவமும் கூத்தும் பிறவுமாம். புலமென்ற திலக்கணங்களை, பனு வலென்ற தவ்விலக்கணங்களெல்லாமகப் படச் செய்கின்றதோர் குறி. அவையிதனுட் கூறுகின்ற வுரைச் சூத்திரங்களானு மரபிய லானு முணர்க. பாண்டியன் மா கீர்த்தி யிருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலினவனு மவனவையிலுள்ளோரு மறிவு மிக்கிருத்தலினவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கு விடைகூறினர். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி நீர் தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க வென்று கூறுதலானுந் தொல்காப்பியனாரும் பல்காலுஞ் சென்று யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டுமென்று கூறுதலானு மிவ்விரு வரும் வெகுளாமலிந் நூற்குக் குற்றங்கூறி விடுவலெனக் கருதி யவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலினரிறபவென்றார் அவர் கேளன்மினென்றற்குக் காரணமென்னையெனின் தேவரெல் லாரும் கூடி யாஞ்சேர விருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை யுயர்ந்த திதற்கு அகத்தியனாரே யாண்டிருத்தற்குரியரென்றவரை வேண்டிக் கொள்ளவவருந் தென்றிசைக்கட்போதுகின்றவர். கங் கையாருளைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினி யாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை யவர் கொடுப்ப நீரேற் றிரீ இப் பெயர்ந்து வாரவதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்