சேரவமிசத்தோர்
13
சோழன் மகள் நற்சோணையீன்ற மக்களிருவருள் [1] எனப் படுதல் காண்க. இனி, நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவி, வேளாவிக் கோமானான பதுமன் என்பவன் மகள். இவளிடம் அச் சேரனுக்குப் பிறந்த மக்கள், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சோலாதனுமாவர்.[2] இவருள், முன்னவன், முடி சூடுஞ் சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியுங்கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமைபற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியுஞ்செய்து புனைந்து கொண்டமையின் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்' என்னும் பெயர் பெற்றான்.[3] இச்சேரனுக்குப் பெரும்பகைவனாகி அவனாட்டைக் கவர்ந்தவன், கடம்பின் பெருவாயில் என்ற ஊர்க்குரிய நன்னன் என்பவன். இவனை, மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த பெரும்போரிற் கொன்று, தானிழந்த நாட்டை இவ்வேந்தன் திரும்பப் பெற்றான் என்று கல்லாடனார் கூறுவர்.[4] இங்ஙனம் இவன் பெற்றது பூழி நாடென்பது, “பூழி நாட்டைப் படையெடுத்துத்தழீஇ” என இவன் பதிகங் கூறுதலினின்று புலப்படுகின்றது. இவனை 4-ம் பத்தாற்பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் அந்தணர். இவர் இவனைப்பாடி, 40-நூறாயிரங்-