பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சேரன் - செங்குட்டுவன்


காணமும்[1] அவனாட்டிற் பாகமும் பரிசு பெற்றார். இச்சேரல் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான்.[2]

இந்நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரலாதன் செங்கோற்பெருமையாற் சிறந்தவன். இவனது வீரச்செயல்களிலே, தண்டாரணியத்திலுள்ளவரால்[3] கவரப்பட்ட பசுநிரைகளை மீட்டுத் தொண்டியிற் கொணர்ந்து சேர்ப்பித்ததே முக்கியமானது; இதுபற்றியே ‘ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்’ எனப்பட்டான். இவ்வேந்தன் தன்னை 6-ம் பத்தாற் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்புலவர்க்கு, அணிகலன் செய்து கொள்வதற்காக ஒன்பது காப்[4] பொன்னும் தூறாயிரங் காணமுங்கொடுத்து அவரைத் தன் ஆஸ்தானத்தில் வைத்துக்கொண்டு அபிமானித்தனர். இச்சேரலாதன் முப்பத்தெட்டாண்டு வீற்றிருந்தவன்.[5]

இனி, பதிற்றுப்பத்துத் தொகுத்த புலவர் நார்முடிச்சேரலைப்பற்றிய பகுதியை நான்காவதாகவும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது பகுதியை ஆறாவதாகவும்


  1. இது, சேரரின் பழைய நாணயமாகப் பதிற்றுப்பத்துப் பதிகங் களால் தெரிகிறது. மலைநாட்டில் 3-கழஞ்சு அல்லது 14 பணம், காணம் என இப்போது வழங்குகின்றது. (Dr. Gunderts Malayalam Dictionary)
  2. 4ம்- பத்துப்பதிகம்
  3. தண்டாரணியம் -ஆரிய நாட்டிலுள்ளதோர் நாடு. இஃது இப்போது பம்பாய் மாகாணத்தைச் சார்ந்ததாகும். (Dr. Bhandarkar's History of Dekkan. p. 136.)
  4. கா - ஒரு பழைய நிறை.
  5. 6-பத்துப் பதிகம்.